வடகிழக்கு பர்மாவில் 6.8 அளவு நிலநடுக்கம்: பலர் உயிரிழப்பு
வெள்ளி, மார்ச்சு 25, 2011
- 26 ஆகத்து 2013: பர்மாவில் முஸ்லிம் வீடுகள் பல பௌத்த மதக் கும்பலினால் தீக்கிரை
- 8 ஆகத்து 2013: இந்தோனேசியாவில் பௌத்த கோயில் மீதான தாக்குதலை அடுத்து கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
- 31 மே 2013: கெச்சின் போராளிகளுடன் பர்மிய அரசு ஏழு அம்ச உடன்பாடு
- 16 மே 2013: மகசென் சூறாவளி வங்காளதேசத்தின் தெற்குக் கரையைத் தாக்கியது
- 1 ஏப்பிரல் 2013: பர்மாவில் தனியார் பத்திரிகைகளுக்கு அனுமதி
பர்மாவின் வடகிழக்குப் பகுதியில் லாவோஸ், தாய்லாந்து எல்லைப் பகுதியில் 6.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று வியாழக்கிழமை கிரீனிச் நேரப்படி 1355 மணிக்கு தாய்லந்தின் சியாங் ராய் நகரில் இருந்து 110 கிமீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 800 கிமீ தெற்கே தாய் தலைநகர் பாங்கொக், மற்றும் வியட்நாமியத் தலைநகர் ஹனோய் நகரங்கள் வரை உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 130 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பர்மாவின் பான் தாடுவா, பான் லாயென் ஆகிய பிரதேசங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆழிப்பேரலை அபாயம் இல்லை என பசிபிக் சுனாமி அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மூலம்
தொகு- Earthquake hits Myanmar near China and Thailand borders, சிஎன்என், மார்ச் 24, 2011
- Burma quake: More than 50 dead in tremor near Thailand, பிபிசி, மார்ச் 24, 2011
- Magnitude 6.8 - MYANMAR, United States Geological Survey, மார்ச் 24, 2011