பர்மாவில் தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதி

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

பர்மாவில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் அமைக்கவும், வேலைநிறுத்தங்கள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கும் சட்டமூலத்தில் அந்நாட்டு அரசுத்தலைவர் கையெழுத்திட்டுள்ளார்.


குறைந்தது 30 அங்கத்தவர்கள் இணைந்து தொழிற்சங்கங்களை அமைக்கலாம் என்றும், வேலைநிறுத்தம் மேற்கொள்ளுவதற்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் இடத்து அவை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 1962 ஆம் ஆண்டில் இருந்து தொழிற்சங்கங்கள் பர்மாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு இம்மாறங்களை வரவேற்றுள்ளது.


பர்மாவின் புதிய அரசு அண்மைக்காலங்களில் கொண்டுவந்திருக்கும் முக்கிய அரசியல் சீர்திருத்தங்களில் இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


தொழிலாளர்களின் ஒரு சில உரிமைகளாவது தரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே என ஆங் சான் சூச்சியின் சனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் பேச்சாளர் நியான் வின் தெரிவித்தார்.


இவ்வார ஆரம்பத்தில் 200 இற்கும் அதிகமான அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தனர்.


மூலம் தொகு