காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி

சனி, சனவரி 27, 2018


ஆப்கானித்தானின் தலைநகர் காபூலில் தற்கொலைதாரி மருத்துவ முதலுதவி வண்டியில் கொண்டு வந்த வெடிகளை வெடிக்கச்செய்ததில் குறைந்தது 95 பேர் பலியானர்கள். இதைச் செய்தது தாலிபான் தீவிரவாதிகள் என அறியப்படுகிறது.


பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, காவல் சோதனை சாவடி அமைந்துள்ள வீதி ஒன்றில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மருத்துவ முதலுதவி வண்டி ஒன்றை ஓட்டிச் சென்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


காவலர்கள் இவ்வண்டியை இரண்டாவது சோதனை சாவடியில் நிறுத்தியுள்ளனர் என்றும் உடனள அவ்வண்டி ஓட்டுநர் தவறான பாதையில் வண்டியை ஓட்டிச்சென்றாரதாகவும் அங்கும் காவலர்கள் அவ்வண்டியை நிறுத்த முயன்றதாகவும் உடனே தற்கொலைதாரி வெடி குண்டு நிரப்பப்பட்ட வண்டியை வெடித்துவிட்டதாகவும் காபுல் காவல்துறை பேச்சாளர் கூறினார்.


ஒரு வாரத்துக்கு முன்பு காபுல் நகரில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் தாக்குதல் நடத்தி 22 பேரை கொன்ற தாலிபன் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது.


வெளிநாட்டுத் தூதரகங்களும் காபுல் நகர காவல் தலைமை அலுவலகமும் அமைந்துள்ள அப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று சனிக்கிழமை மதியம் 12.15 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டபோது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.


வெளிநாட்டுத் தூதரகங்களும் காபுல் நகர காவல் தலைமை அலுவலகமும் அமைந்துள்ள அப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று சனிக்கிழமை மதியம் 12.15 மணிக்கு தாக்குதல்


அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இதற்கு முன்பு இயங்கி வந்த கட்டமும், ஆப்கானிஸ்தானுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் மற்றும் ஆஃப்கன் உயர் அமைதி கழகம் (Afghan High Peace Council) எனும் தாலிபன்களுடனான பேச்சுவார்த்தைக்கான அமைப்பின் அலுவலகம் ஆகியவை சம்பவ இடத்துக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளன.


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதல் நடந்த இடத்தில் உண்டான புகை மூட்டத்தை நகரம் முழுவதும் இருந்து காண முடிந்தது.



மூலம் தொகு