ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது

சனி, ஏப்பிரல் 13, 2024

ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் 22,000 பவுண்டு (9,800 கிகி) எடையுடைய பெரும் வெடிகுண்டை வியாழக்கிழமை மாலையில் போட்டது.


எம் . சி -130 வானூர்தியில் இருந்து நன்கர்கார் மாகாணத்திலுள்ள ஆச்சின் மாவட்டத்தில் இசுலாமிய அரசு தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தில் வீசப்பட்டது. வீசப்பட்ட இடம் மலைகள் நிறைந்ததும் குறைந்த மக்கள் உடையதும் ஆகும்.


இசுலாமிய அரசு அமைப்பினர் இங்குள்ள குகைகளில் இருந்து அரசு படையினரை தாக்கிவிட்டு தப்பி விடுகின்றனர் என்று பென்டகன் அறிவித்துள்ளது. தாக்குதல் நடந்த இடம் பெசாவருக்கு அருகில் ஆப்கானித்தான் பாக்கித்தான் எல்லையில் உள்ளது.

வெடுகுண்டுகளின் தாய் என்ற பெயருடைய வெடிகுண்டு

இந்த குண்டு இசிபியு-43 என்று அழைக்கப்படும் இதை விட பெரிய குண்டு 30,000 பவுண்டு எடையுள்ள இசிபியு-57 அமெரிக்க படையிடம் உள்ளது. ஆனால் இசிபியு-43 குண்டு அதிக வெடிமருந்தை கொண்டது. இக்குண்டு இது வரை போர்களத்தில் பயன்படுத்த பட்டதில்லை. இது 9 மீட்டர் நீளம் உடையது.


இசிபியு-43 புவியிடங்காட்டி மூலம் வழிநடத்தப்படுகிறது. இது 15,000 பவுண்டு எடையுடைய பிஎல்யு-82 என்ற குண்டின் முன்னேறிய வடிவமாகும். பிஎல்யு-82 முதன் முதல் வியட்நாம் போரில் அதிகம் பயன்படுத்தப்பட்டது, ஆப்கானித்தானில் போரின் தொடக்க காலத்தில் அதிகம் பயன்படுத்தப் பட்டது.



மூலம் தொகு