தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு
புதன், செப்டம்பர் 9, 2009, ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தானில் நேட்டோ சிறப்புப் படையினர் நடத்திய ஒரு பிரமிப்பூட்டும் வகையில் ஹெலிகாப்டர் மூலமான மீட்பு நடவடிக்கையில், தலிபான்களால் கடத்தப்பட்டிருந்த ஒரு பிரித்தானியச் செய்தியாளர் மீட்கப்பட்டார்.
ஆனால், இந்த நடவடிக்கையில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில், இவரது சகாவான ஆப்கானியர் ஒருவரும், பிரித்தானியப் போர்வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இதில் வேறு இரு ஆப்கானிய பொதுமக்களும் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயோர்க் டைம்ஸ் செய்தியாளரான ஸ்டீபன் ஃபரலும், சுல்தான் முனாடியும் பிடித்து வைக்கப்பட்டிருந்த தலிபான்களின் வளாகம் ஒன்றினுள் நேட்டோ படையினர் தரையிறங்கினார்கள்.
படையினர் மேலும் கவனமாக இருந்திருந்தால், செய்தியாளர் முனாடி காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆப்கான் செய்தியாளர் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.