இலங்கை தேர்தல் 2010: ராஜபக்சவின் ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது

வெள்ளி, ஏப்பிரல் 9, 2010

நேற்று நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரையில் வெளியிடப்பட்ட முடிவுகளின் படி அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையை பெற்றுள்ளது.


தேர்தலில் கட்சிகள் வெற்றியீட்டிய தொகுதிகள்

ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், ராஜபக்சவின் கூட்டணி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது.


முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சரத் பொன்சேகா தலைமையிலான சனநாயக மக்கள் முன்னணி 5 இடங்களைப் பெற்றிருக்கிறது.


இதே வேளையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட, கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) 12 இடங்களைப் பெற்றிருக்கிறது.


தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றதாகக் கருதப்படும் கண்டி மற்றும் திருகோணமலை தேர்தல் மாவட்டங்களின் முடிவுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

வெளியிடப்பட்ட முடிவுகள்
மாவட்டம் ஐக்கிய
மக்கள்
முன்னணி
ஐக்கிய
தேசியக்
கட்சி
தமிழரசுக்
கட்சி
சனநாயக
மக்கள்
முன்னணி
கொழும்பு 10 7 0 2
கம்பகா 12 5 0 1
களுத்துறை 7 2 0 1
கண்டி
மாத்தளை 4 1 0 0
நுவரேலியா 5 2 0 0
காலி 7 2 0 1
மாத்தறை 6 2 0 0
அம்பாந்தோட்டை 5 2 0 0
குருணாகலை 10 5 0 0
புத்தளம் 6 2 0 0
அநுராதபுரம் 7 2 0 0
பொலநறுவை 4 1 0 0
பதுளை 6 2 0 0
மொனராகலை 4 1 0 0
இரத்தினபுரி 7 3 0 0
கேகாலை 7 2 0 0
மட்டக்களப்பு 1 1 3 0
அம்பாறை 4 2 1 0
திருகோணமலை
வன்னி 2 1 3 0
யாழ்ப்பாணம் 3 1 5 0
தேசியப்பட்டியல்
மொத்தம் 117 46 12 5

தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவோர்: 19 (அறிவிக்கப்படவில்லை)
மொத்தம்: 225

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு