கண்டி, நாவலப்பிட்டி தொகுதிகளில் ஏப்ரல் 20 இல் மீள் வாக்கெடுப்பு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

ஞாயிறு, ஏப்பிரல் 11, 2010

திருகோணமலை மற்றும் கண்டி தேர்தல் தொகுதிகளில் சில வாக்கெடுப்பு நிலையங்களில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட வாக்கெடுப்பு, எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வன்முறைகள் மற்றும் சட்ட மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டு திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுபிட்டிய மற்றும், கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியின் 34 வாக்கெடுப்பு நிலையங்களின் வாக்குகள் ரத்து செய்யப்பட்டன.


நாவலப்பிட்டியில் வாக்குச் சாவடிகளில் அதிகாரிகள் மிரட்டப்பட்டமை, வாக்காளர்கள் தாக்கப்பட்டமை போன்றவைக்காகவும், திருகோணமலையின் கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்தில் உள்ளே புகுந்த கும்பல் ஒன்று வாக்குப் பெட்டிகளைத் தூக்கிச் சென்றமைக்காகவும் வாக்களிப்புகள் இடைநிறுத்தப்பட்டன.


இந்த நிலையில் அந்த வாக்கெடுப்பு நிலையங்களில் மீண்டும் வாக்குப் பதிவுகள் மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் நாவலபிட்டி மற்றும் கும்புறுபிட்டிய தேர்தல் வாக்கு நிலையங்களின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது. எனவே எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தி, முழுமையான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்

தொகு