ஆப்கான் பனிச்சரிவில் சிக்கி 150 பேர் உயிரிழப்பு

புதன், பெப்பிரவரி 10, 2010


ஆப்கானிஸ்தானில் மலைச் சுரங்கப் பாதை ஒன்றைச் சுற்றி வரிசையாக நடந்துள்ள பனிச் சரிவுகளால் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது.


இந்து குஷ் மலைத்தொடர்
இந்து குஷ் மலைத்தொடர்

சலங் என்ற இந்த சுரங்கப் பாதையின் உள்ளே புகையில் மூச்சுத் திணறி சிலர் இறந்தனர். மற்றவர்கள் பனிச் சரிவில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர். சுரங்கப்பாதையின் உள்ளே எத்தனை பேர் சிக்குண்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது. 2,500 பேர் வரையில் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.


அப்பகுதியில் கடந்த பல நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து தற்போது இந்த பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமையில் இருந்து இருபதிற்கும் மேற்பட்ட பனிச்சரிவுகள் அங்கு ஏற்படு 2.1 மைல் நீளப் பாதையை மூடியுள்ளன.


இந்து குஷ் மலைத்தொடரில் உயரமான இடத்தில் இந்த சலங் சுரங்கப்பாதை அமைந்துள்ளது.


ஆப்கானிஸ்தானின் வட பகுதியிலிருந்து காபூல் நோக்கி செல்லும் முக்கியப் பாதையில் உள்ள இச்சுரங்கப் பாதை மத்திய ஆசியாவை துணைக் கண்டத்துடன் தொடர்பு படுத்தும் பாதையாக அமைந்துள்ளது.


இதற்கிடையில், இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரில் திங்களன்று இடம்பெற்ற பனிச்சரிவுகளில் சிக்கி 17 இந்திய இராணுவத்தினர் இறந்ததாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

மூலம்