ஆப்கானிய அதிபரின் சகோதரர் படுகொலை
செவ்வாய், சூலை 12, 2011
- 27 சனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி
- 13 ஏப்பிரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 28 அக்டோபர் 2015: பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம், 263 பேர் உயிரிழப்பு
- 9 ஏப்பிரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு
- 21 செப்டெம்பர் 2014: ஆப்கானித்தானில் தேர்தல் சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட சமரசத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு
ஆப்கானித்தானின் அரசுத்தலைவர் அமீது கர்சாயின் உடன்பிறவாச் சகோதரர் ஒருவர் இன்று கண்டகார் மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆப்கானித்தானின் தெற்குப் பகுதியில் பிரபலம் வாய்ந்த அரசியல் புள்ளியாக இருந்த அகமது வாலி கர்சாய் (வயது 50) அவரது வீட்டில் வைத்து அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இப்படுகொலை நேட்டொ படைகளுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மெய்ப்பாதுகாவலர் சர்தார் முகமது என்பவர் கர்சாயை நோக்கி இரண்டு தடவைகள் சுட்டு விட்டு தன்னைத் தானே சுட்டு இறந்துள்ளதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். இத்தாக்குதலைத் தாமே நிகழ்த்தியதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். தமது பத்தாண்டுப் போரில் இது ஒரு முக்கிய தாக்குதலாக இதன அவர்கள் வர்ணித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட அகமது கர்சாய் ஒரு போர்ப்பிரபு என்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர் என்றும் விமரிசகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இக்கருத்தினை அரசுத்தலைவர் அமீது கர்சாய் மறுத்திருக்கிறார்.
கண்டகார் மாகாணசபையின் தலைவராக உள்ள அகமது கர்சாய் ஆப்கானித்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க,, மற்றும் நேசப் படைகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கியவர். இதனால் அவர் தனது போதைப் பொருள் வர்த்தகத்தை தடங்கலின்றி நடத்த முடிந்தது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மூலம்
தொகு- Afghan president's brother, Ahmad Wali Karzai, killed, பிபிசி, சூலை 12, 2011
- Taliban has claimed responsibility for the killing of Ahmad Wali Karzai, சேனல் 4, சூலை 12, 2011