ஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக் கொலை

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, செப்டெம்பர் 8, 2013

ஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


கொல்கத்தாவைச் சேர்ந்த எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி (49) ஆப்கானிஸ்தானில் சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆப்கானித்தானைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியான சுஷ்மிதாவின் சமூக நலப் பணிகளை தலிபான்கள் சகித்துக் கொள்ளவில்லை. அவர் சமீபத்தில் தான் கொல்கத்தாவில் ஈத் பண்டிகையை கொண்டாடி விட்டு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், கரானாவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த தலிபான் தீவிரவாதிகள் கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களைக் கட்டிப் போட்டனர். சுஷ்மிதா பானர்ஜியை சுட்டுக் கொன்றனர்.


இக்கொலை மாநிலங்களவை வெள்ளியன்று கூடிய போது கடுமையாக எதிரொலித்தது. மேற்கு வங்க உறுப்பினர்களும், இதர உறுப்பினர்களும் இதை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.


மூலம்

தொகு