அமெரிக்கத் தலைவர் ஒபாமாவின் வரலாற்றுப் புகழ் மிக்க பர்மியப் பயணம்
திங்கள், நவம்பர் 19, 2012
- 26 ஆகத்து 2013: பர்மாவில் முஸ்லிம் வீடுகள் பல பௌத்த மதக் கும்பலினால் தீக்கிரை
- 8 ஆகத்து 2013: இந்தோனேசியாவில் பௌத்த கோயில் மீதான தாக்குதலை அடுத்து கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
- 31 மே 2013: கெச்சின் போராளிகளுடன் பர்மிய அரசு ஏழு அம்ச உடன்பாடு
- 16 மே 2013: மகசென் சூறாவளி வங்காளதேசத்தின் தெற்குக் கரையைத் தாக்கியது
- 1 ஏப்பிரல் 2013: பர்மாவில் தனியார் பத்திரிகைகளுக்கு அனுமதி
ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவர் பராக் ஒபாமா பர்மாவுக்கான வரலாற்றுப் புகழ் மிக்க தனது பயணத்தை இன்று ஆரம்பித்தார். பதவியில் இருக்கும் ஒரு அமஎரிக்கத் தலைவர் பர்மாவிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதற் தடவையாகும்.
பர்மியத் தலைவர் திரின் செயினைச் சந்திப்பதற்காக ஒபாமா சென்ற போது வழியெங்கும் மக்கள் கூடி அவரை வரவேற்றனர். பலர் அமெரிக்கக் கொடிகளை அசைத்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஒபாமா ஆங் சான் சூச்சி அம்மையாரையும் சந்தித்தார். பின்னர் ரங்கூன் பல்கலைக்கழகத்தில் உரியாற்றினார்.
2010 நவம்பரில் இராணுவ ஆட்சி முடிவடைந்ததை அடுத்து தலைவர் தெயின் செய்னினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே ஒபாமாவின் இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். ஆறு மணி நேரம் மட்டுமே பர்மாவில் தங்கியிருக்கிறார் அதிபர் பராக் ஒபாமா. இங்கு தங்கியிருக்கும் குறுகிய நேரத்தில் அவர் அரசுத்தலைவர்கள் பலரை அவர் சந்திக்க விருக்கிறார். பர்மாவுக்கு அமெரிக்கா வழங்கவிருக்கும் $170 மில்லியன் நிதி உதவி பற்றியும் அவர் அறிவிப்பார்.
அமெரிக்கத் தலைவருடனான சந்திப்பை அடுத்து பர்மியத் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், "மியன்மாரில் சனநாயகம் மலரவும், அங்கு மனித உரிமைகள் சரவதேசத் தரத்தில் இருக்கவும் இரு தரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன," என்றார்.
பர்மாவின் வரலாற்றுப் புகழ் மிக்க சுவேதகோன் பௌத்த கோயிலையும் அவர் பார்வையிட்டார்.
பர்மாவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பராக் ஒபாமா கம்போடியாவில் இடம்ம்பெறவிருக்கும் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
மூலம்
தொகு- US President Obama in landmark Burma visit, பிபிசி, நவம்பர் 19, 2012
- Praise and pressure for Obama on historic Myanmar visit, ராய்ட்டர்ஸ், நவம்பர் 19, 2012