2012 உலக சதுரங்கப் போட்டியில் விசுவநாதன் ஆனந்த் வெற்றி
புதன், மே 30, 2012
- 17 பெப்ரவரி 2025: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 17 பெப்ரவரி 2025: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 பெப்ரவரி 2025: டோக்கியோ 2020 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்த தகுதி பெற்றது
- 17 பெப்ரவரி 2025: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது
- 17 பெப்ரவரி 2025: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது
இந்திய கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த், இசுரேலை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் போரிஸ் ஜெல்ஃபான்டை தோற்கடித்ததன் மூலம் மாஸ்கோவில் நடைபெற்று வந்த உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் விசுவநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக இப்பட்டத்தை கைப்பற்றுகிறார்.
இந்த உலக சதுரங்கப் போட்டியில் இதுவரை நடந்து 12 சுற்று போட்டிகளில் இருவரும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றனர், மீதி போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன. எனவே இருவரும் 6-6 புள்ளிகளில் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் இன்று நடந்த
வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியில் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் ஆனந்த் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினார்.
இன்று நடைபெற்ற வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியில் நான்கு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொருவருக்கும் தலா 25 நிமிடங்கள் தரப்பட்டன. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்தது, இரண்டாவது போட்டியில் ஆனந்த் வெற்றி பெற்றார், மீண்டும் மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்தது, நான்காவது போட்டியில் 56வது நகர்த்தலுக்குப் பின் போட்டி சமனில் முடிவடைந்தது. எனவே ஆனந்த் வெற்றி பெற்றார்.இதன் மூலம் ஆனந்த் $1.5மில்லியன் பரிசுத் தொகையையும், போரிஸ் ஜெல்ஃபான்ட் $1மில்லியன் பரிசுத் தொகையையும் பெறுகின்றனர்.
தொடர்புள்ள செய்திகள்
தொகுமூலம்
தொகு- Viswanathan Anand beats Boris Gelfand to win World Chess title என்டிடிவி, 30 மே, 2012
- Vishy Anand wins Moscow chess championshipபிபிசி, 30 மே, 2012.
- 5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த்தினமலர், 30 மே, 2012