பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, நவம்பர் 29, 2024

சாப்பேக்யோன்சே அணி

பிரேசிலின் சாப்பேக்யோன்சே (Chapecoense) கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி கொலம்பியாவில் விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி ஆகினர். மொத்தம் 81 பேர் இவ்வானூர்தியில் பயணம் செய்தனர். தனி வானூர்தியில் குழு பயணம் செய்தது இதில் இருந்தவர்கள் அனைவரும் இந்த கால்பந்தாட்ட குழுவை சேர்ந்தவர்கள்.


பிரேசிலின் சாவோ பாவுலோ நகரில் புறப்பட்ட இவ்வானூர்தி பொலியாவின் சான்டா குருசு வழியாக கொலம்பியாவின் மெடலின் நகருக்கு வந்து கொண்டிருந்தது. மெடலின் நகரை அந்த வானூர்தி அணுகிக் கொண்டிருந்த வேளையில், மோசமாக காலநிலையால் மலைப்பாங்கான இடத்தில் வைத்து விழுந்து நொறுங்கிய இந்த வானூர்தியில்கா ல்பந்து விளையாட்டு வீரர்கள், செய்தியாளர்கள், வானூர்தி ஊழியர்கள் என மொத்தம் 81 பேர் பயணம் செய்தனர்.


மின்சார கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் தெற்கு பகுதியை சேர்ந்த சிறியதொரு அணியான சாப்பேக்யோன்சே கால்பந்து அணி, அடிமட்ட நிலையிலிருந்து உயர்ந்து, தென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய குழுப் போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.


மெடெலின் சர்வதேச வானூர்தி நிலையத்துக்கு தெற்கே முப்பது கிலோ மீட்டர்கள் தொலைவில், லா யூனியன் நகரை கடந்து சென்ற போது மின் கோளாறு குறித்து வானூர்தி அறிவித்துள்ளது. பின்னர் அது வீழ்ந்து நொருங்கியது. இவ்விபத்தில் இறந்தவர்களுக்காக பிரேசில் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்க போவதாக அறிவித்துள்ளது.


தப்பிய இருவர் கால்பந்தாட்ட வீரர்கள் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்னொரு கால்பந்தாட்ட வீரர் தப்பி மருத்துமனையில் உயிரிழந்ததாக தெரிகிறது.


1973இல் உருவாக்கப்பட்ட இவ்வணி 2014ஆம் ஆண்டை தவிர எல்லா ஆண்டும் பிரேசிலின் சீரியசு ஏ குழு ஆட்டங்களில் விளையாடி வருகிறது


இந்த போட்டிக்கான கோப்பையை சாப்பேக்யோன்சே கால்பந்து அணிக்கே வழங்கலாம் என்று அந்த அணி மோதவிருந்த மெடெலின் நகரின் அலேடிகோ நேசனல் கால்பந்து அணியின் தலைவர் யோசனை கூறியிருக்கிறார்.



மூலம்

தொகு