2012 உலக சதுரங்கப் போட்டித் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விசுவநாதன் ஆனந்த் தோல்வி

திங்கள், மே 21, 2012

உருசியத் தலைநகர் மாஸ்கோவில் தற்போது நடைபெற்று வரும் உலக சதுரங்கப் போட்டியில் 7வது சுற்று ஆட்டத்தில் நடப்பு உலக வாகையாளரான இந்திய கிராண்ட்மாஸ்டர் ‌வி‌சுவநாத‌ன் ஆனந்த், இசுரேலை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் போரிஸ் ஜெல்ஃபான்டிட‌ம் தோ‌ல்‌வி அடை‌ந்தா‌ர்.


இதற்கு முன்னர் நடைபெற்ற 6 சுற்றுப் போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில் நேற்று நடந்த 7வது ஆட்டத்தில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடிய ஆனந்த் 38வது காய் நகர்த்தலுக்கு பிறகு அதிர்ச்சி தோல்வி கண்டார்.


12 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஆனந்த் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். மற்ற ஆட்டங்கள் அனைத்தும் வெற்றி தோல்வியின்றி முடிந்து இருந்தன. 7வது சுற்று முடிவில் போரிஸ் ஜெல்ஃபான்ட் 4-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.


மூலம் தொகு