2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. பாக்கித்தான்

ஞாயிறு, பெப்பிரவரி 27, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் ஏ பிரிவு போட்டி நேற்று சனிக்கிழமை ஆர். பிரேமதாச அரங்கத்தில் பகல்-இரவு ஆட்டமாக இலங்கை அணிக்கும் பாக்கித்தான் அணிக்கும் இடையில் இடம்பெற்றது. பாக்கித்தான் அணி இலங்கையை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.


நாணயச் சுழற்சியில் வென்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 50 ஓவர்களில் 7 இலக்குகள் இழப்புக்கு 277 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி 50 ஓவர்களில் 9 இலக்குகள் இழப்புக்கு 266 ஓட்டங்கள் எடுத்தது. பாக்கித்தானின் சகிட் அபிரிடி 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.


இதன் மூலம் பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளைப் பெற்றது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானை இன்னும் இலங்கை வீழ்த்தவில்லை என்பதும் தொடர்கிறது.


சாமர சில்வா களமிறங்கி முதல் 55 பந்துகளில் 20 ஓட்டங்களையே எடுத்தார். அரைசதம் எடுத்த பிறகே இவர் தன் முதல் எல்லையை அடித்தார். இறுதியில் இவர் 78 பந்துகளுக்கு 57 ஓட்டங்களை எடுத்தார். சங்கக்காராவும் சாமர சில்வாவும் இணைந்து 104 ஓட்டங்களில் 73 ஓட்டங்களைச் சேர்த்தனர்.


இறுதியில் 3 ஓவர்களில் 36 ஓட்டங்கள் இலங்கைக்குத் தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் உமர் குல்லின் பந்தில் குலசேகரா ஆட்டமிழந்தார்.


சயிட் அப்ரிடி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். உலகக்க்கிண்ணப் போட்டி ஒன்றில் பாக்கித்தான் அணியை இலங்கை இதுவரை தோற்கடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மூலம் தொகு