2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. கனடா
திங்கள், பெப்பிரவரி 21, 2011
- 6 ஏப்பிரல் 2011: இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவர் பணியில் இருந்து சங்கக்கார விலகல்
- 2 ஏப்பிரல் 2011: 2011 துடுப்பாட்டம்: இந்தியா இலங்கையை வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது
- 31 மார்ச்சு 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது
- 30 மார்ச்சு 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
- 26 மார்ச்சு 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் இங்கிலாந்தை வெளியேற்றியது இலங்கை
2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் ஏ பிரிவின் மூன்றாவது போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மகிந்த ராஜபக்ச பன்னாட்டு அரங்கத்தில் பகல்-இரவு ஆட்டமாக இலங்கை அணிக்கும் கனடா அணிக்கும் இடையில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார முதலில் தமது அணியை துடுப்பாடத் தெரிவு செய்தார். இலங்கை அணியில் முன்னணி வீரர் லசித் மாலிங்கவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
ஆரம்ப ஆட்டக்காரர் டில்ஷான் 59 பந்துகளுக்கு 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். குமார் சங்கக்கார 87 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பெற்றார். மகேல ஜயவர்தன 81 பந்துகளுக்கு 100 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக வேகமாக சதம் பெற்ற இலங்கை வீரராகவும் மூன்றாவது பன்னாட்டு வீரராகவும் அவர் வரலாறு படைந்த்தார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 332 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு ஆடிய கனடா அணி 37 ஓவர்களில் 122 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது. றிஸ்வான் சீமா 35 பந்துகளுக்கு 37 ஓட்டங்களைப் பெற்றார். நுவன் குலசேகர, திசாரா பெரேரா தலா 3 இலக்குகளையும் முரளிதரன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
மகெல ஜயவர்தன போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டியில் 300 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது இது 6வது தடவையாகும்.
மூலம்
தொகு- ICC Cricket World Cup - 3rd match, Group A, கிரிக்இன்ஃபோ, பெப்ரவரி 20, 2011
- இலங்கை அணி 210 ஓட்டங்களால் இலகு வெற்றி, தினகரன், பெப்ரவரி 21, 2011