2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. ஆத்திரேலியா

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, மார்ச்சு 6, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் ஏ பிரிவில் நேற்று சனிக்கிழமை ஆர். பிரேமதாச அரங்கத்தில் பகல்-இரவு ஆட்டமாக இலங்கை அணிக்கும் ஆத்திரேலியா அணிக்கும் இடையில் இடம்பெற்ற ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது.


நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 32.5 பந்துப் பரிமாற்றங்களில் (ஓவர்களில்) 3 இலக்குகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலைக்கு கொண்டுவரப்பட்டது.


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வீதம் வழங்கப்பட்டுள்ளது.


துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டில்சான் 4 ஓட்டங்களுடன் சோன் டைடின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து உபுல் தரங்க 6 ஓட்டங்களுடன் பிரெட் லீயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய மகேல ஜயவர்தன சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்த போதும் ரன் அவுட் மூலம் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


களத்தில் இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார 73 ஓட்டங்களுடனும் (102 பந்துகள்) சமரவீர 34 ஓட்டங்களுடனும் விளையாடியிருந்த நிலையில் மழை குறிக்கிட்டு ஆட்டம் கைவிடப்பட்டது. சங்கக்கார 7 எல்லைகளுடன் உலகக் கிண்ண போட்டிகளில் தனது 6 ஆவது அரைச் சதத்தைப் பெற்றார்.


குழு ஏ இல் தற்போது பாக்கித்தான் அணி 3 ஆட்டங்கள் விளையாடி 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இலங்கை அணி 4 ஆட்டங்கள் விளையாடி 5 புள்ளிகளும் ஆத்திரேலிய அணி 3 ஆட்டங்கள் ஆடி 5 புள்ளிகளும் பெற்றுள்ளன. நியூசிலாந்து அணி 3 ஆட்டங்களுக்கு 4 புள்ளிகள் பெற்றுள்ளது.


மூலம்

தொகு