2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இந்தியா எ. வங்காளதேசம்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, பெப்பிரவரி 20, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் பி பிரிவின் முதலாவது போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை 87 ஓட்டங்களால் வென்றது. இப்போட்டி வங்காளதேசத்தில் டாக்காவில் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் பகல்-இரவுப் போட்டியாக நேற்று இடம்பெற்றது. பூவா தலையா போட்டுப் பார்த்ததில் வெற்றி பெற்ற வங்காள அணி இந்திய அணியை முதலில் முதலில் துடுப்பாட அழைத்தது. இந்தியாவின் வீரேந்தர் சேவாக் 140 பந்துகளில் 175 ஓட்டங்கள் எடுத்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவர் எடுத்த அதி கூடிய ஓட்டங்களாகும். தனது முதலாவது ஒரு நாள் ஆட்டத்தை விளையாடிய இந்தியாவின் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை எடுத்தார். இந்தியா 4 இலக்குகள் இழப்புக்கு 50 ஓவர்களில் 370 ஓட்டங்களைக் குவித்தது.


பதிலுக்கு விளையாடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 9 இலக்குகள் இழப்பிற்கு 283 ஓட்டங்களை எடுத்தது. டாமிம் இக்பால் 86 பந்துகளுக்கு 70 ஓட்டங்களி எடுத்தார். முனாஃவ் பட்டேல் 48 ஓட்டங்கள் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.


வீரேந்தர் சேவாக் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டீவ் டேவிஸ் (ஆத்திரேலியா), குமார் தர்மசேன (இலங்கை) ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினார்கள்.


மூலம்

தொகு