2010 இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு, தனுஷ் சிறந்த நடிகராகத் தெரிவு

வெள்ளி, மே 20, 2011

58ஆவது இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் நேற்று வியாழக்கிழமை இந்தியத் தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியால் அறிவிக்கப்பட்டன. இதில் தென்னிந்தியத் திரைப்படங்கள் பல விருதுகளைப் பெற்றுள்ளன. விருது வாங்கியவர்களது விபரங்களும் திரைப்படங்களின் விபரங்களும் பின்வருமாறு.

 • சிறந்த திரைப்படம் - ஆதாமிண்டே மகன் அபு (மலையாளம்)
 • சிறந்த அறிமுகப் படம் (இந்திராகாந்தி விருது) - பாபூ பாண்ட் பாஜா (மராத்தி)
 • சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - தபங்க் (இந்தி)
 • சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுப் படம் (நர்கீஸ் தத் விருது) - மோனெர் மனுஷ் (வங்காளம்)
 • சமுதாய விவங்காரங்கள் தொடர்பான சிறந்த படம் - சாம்பியன்ஸ் (மராத்தி)
 • சூழலியல் தொடர்பான சிறந்த படம் - பெட்டடா ஜீவ (கன்னடம்)
 • சிறந்த குழந்தைகள் படம் - ஹெஜ்ஜேகளு (தெலுங்கு)
 • சிறந்த இயக்குனர் - வெற்றிமாறன் (தமிழ்) (திரைப்படம் - ஆடுகளம்)
 • சிறந்த நடிகர் - தனுஷ் (தமிழ்) (திரைப்படம் - ஆடுகளம்)
- சலீம் குமார் (மலையாளம்) (திரைப்படம் - ஆதாமிண்டே மகன் அபு)
 • சிறந்த நடிகை - சரண்யா பொன்வண்ணன் (தமிழ்) (திரைப்படம் - தென்மேற்குப் பருவக்காற்று)
- மிதாலி ஜக்தப் வரத்கர் (மராத்தி) (பாபூ பாண்ட் பாஜா)
 • சிறந்த துணை நடிகர் விருது - ஜே. தம்பி இராமையா (தமிழ்) (திரைப்படம் - மைனா)
 • சிறந்த துணை நடிகை விருது - சுகுமாரி (தமிழ்) (திரைப்படம் - நம்ம கிராமம்)
 • சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஹர்ஷ் மாயர் (இந்தி) (திரைப்படம் - ஐ அம் கலாம்)
- சாந்தணு ரங்கனேக்கர், மச்சிந்திரா கட்கர் (மராத்தி) (திரைப்படம் - சாம்பியன்ஸ்)
- விவேக் சாபுக்ஸ்வர் (மராத்தி) (திரைப்படம் -பாபூ பாண்ட் பாஜா)


மூலம் தொகு