நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, பெப்பிரவரி 25, 2024

புகழ் பெற்ற திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.


ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக கடந்த 1963ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13ந் தேதி மீனம்பட்டியில் (சிவகாசிக்கு அருகில் உள்ளது) பிறந்த ஸ்ரீதேவி தனது நான்காம் வயதில் 'துணைவன்' திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.


அவரின் தந்தை ஐயப்பன் 1990ல் மாரடைப்பாலும் 1996ம் ஆண்டு தாய் ராஜேஸ்வரி புற்று நோயாலும் மரணமடைந்தனர், பின் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.


1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதில் காங்கிரஸ் போட்டியிட்டார் ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன். அப்போது, தனது தந்தையுடன் ஒரு வார காலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்ரீதேவி. 1989 தேர்தலில் அவரது தந்தை தோல்வியடைந்தாலும் முன்னதாக அவரது பெரியப்பா ராமசாமி 1977ல் ஜனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக 10 ஆண்டுகளும், அனுப்பன்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக 20 ஆண்டுகளும் இருந்துள்ளார்.


அவரது தங்கை லதாவின் கணவரான சஞ்சய் ராமசாமி 1991ல் சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவரது தந்தையும் பெரியப்பா ராமசாமியும் இணைந்து மீனம்பட்டி கிராமத்தில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் வகையில் பாரதி துவக்கப்பள்ளி துவக்கினர். அப்பள்ளி இன்று வரை செயல்பட்டு வருகிறது.


ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் அவரது உறவினர் மகளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சதிஷ் மற்றும் ஆனந்தன் என்னும் இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். சதிஷ் இறந்த விட்டார். தற்போது ஆனந்தன் மட்டும் சிவகாசியிலேயே வசித்து வருகிறார்.


இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில், 1976இல் வெளியான, ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் உள்ளிட்டோர் நடித்த, 'மூன்று முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர் அதன் பின்னர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தியிலும் 1970களின் பிற்பாதியிலும், 1980களிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கினார்.


பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள ஸ்ரீதேவி, 2013இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.


இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை 1996இல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி, 1997இல் வெளியான 'ஜூடாய்' எனும் இந்தி திரைப்படத்தில் நடித்த பின்னர் நடிப்பதிலிருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார்.


பதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் நடித்து, இந்தி மற்றும் தமிழில் வெளியான 'இங்கிலீசு விங்கிலீசு திரைப்படம் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றது. 2017இல் வெளியான 'மம்' எனும் இந்தி திரைப்படத்தில் அவர் கடைசியாக நடித்தார். அது அவரது 300வது திரைப்படமாகும்

மூலம்

தொகு