ரமணா திரைப்படத்தில் வரும் கதாபாத்திர பேராசிரியர் பணி ஓய்வு - கண் கலங்கிய மாணவர்கள்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, சூன் 7, 2014

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஜான் குமார் ஜூன் 1-ம் தேதி தனது பேராசிரியர் பணியை நிறைவு செய்தார்.


அநீதிக்கு எதிராக நியாயம் கற்பிக்கும் பேராசிரியராக ரமணா திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் இவரின் செயலை வைத்தே எடுக்கப்பட்டது என்று இவரிடம் கல்வி பயின்ற சினிமா இயக்குனர் முருகதாஸ் கொஞ்ச காலத்திற்கு முன்பு தெரிவித்திருந்தார்.


அதேபோல் இவரின் ஓய்வை நினைத்து இவரின் மாணவர்கள் பலரும் (பெரிய பதவியில் உள்ளவர்கள்) புகழாரம் சூட்டினார்கள். அவர்கள் நேரில் சென்றும், மின்னஞ்சல்கள் மூலமும், சமூக வலைத்தளங்களிலும், கைபேசிகள் மூலம் குறுந்தகவல்களாகவும் மற்றும் கடிதம் உதவியுடனும் தமது பேராசிரியருக்கு புகழாரம் சூட்டி கண்ணீர் வடித்தார்கள். இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


மூலம்

தொகு