பாக்கித்தானில் விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 127 பேர் உயிரிழப்பு

வெள்ளி, ஏப்பிரல் 20, 2012

பாக்கித்தானில் போஜா ஏர் ஜெட் (BHO-213) விமானம் கராச்சியிலிருந்து இசுலாமாபாத் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக சக்லாலா, ராவல்பிண்டி அருகே விழுந்து நொறுங்கியதில் 127 பேர் உயிரிழந்தனர்.


இந்த சம்பவம் இசுலாமாபாத் விமான நிலையத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே நிகழ்ந்துள்ளது. இவ்விமானம் 117 பயணிகள் மற்றும் 9 விமானப் பணியாளர்கள் கொண்ட குழுவினருடன் சென்ற போயிங் 737 வகை விமானம் என நம்பப்படுகிறது. விமானம் விழுந்து நொறுங்கியதில் தீப்பிடித்ததாகவும் அதனால் விமானம் முழுவதும் எரிந்து போனதாகவும் கூறப்படுகிறது.


விமானம் விபத்துக்குள்ளான நேரத்தில் அவ்விடத்தில் புயல் மழை பெய்துள்ளது. மேலும் இதே போல 2010 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இசுலாமாபாத் அருகே ஏர்பஸ் விமானம் ஏ231 விழுந்து நொறுங்கியதில் 152 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு