பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், செப்டெம்பர் 29, 2016

இந்திய எல்லையோரம் பாக்கித்தான் கட்டுப்பாட்டு காசுமீரத்திலுள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா புதன் இரவு ஊடுறுவி தாக்கியது


இதில் குறிப்பிடத்தக்க சேதம் தீவிரவாதிகளுக்கும் அவர்களை பாதுகாத்தவர்களுக்கும் ஏற்பட்டது என இந்தியா தெரிவித்தது. ஊடுறுவி இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என பாக்கித்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு இராணுவங்களும் சுட்டுக்கொண்டதில் இரு பாக்கித்தானிய இராணுவத்தினர் இறந்தனர் என்று கூறியது.


இராணுவமும் வெளியுறவு அமைச்சகும் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் நடந்த இந்தியாவுக்குள் ஊருருவ திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது மட்டுமே இராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது என்றனர்.


தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருந்த நிலையை நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் அறிந்து அவர்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினர்.


பாக்கித்தான் கட்டுப்பாட்டு பகுதிக்கு இராணுவம் சென்றதாகவோ எல்லை தாண்டி சுட்டதாகவோ இந்திய இராணுவம் தெரிவிக்கவில்லை.


எனினும் பி டி ஐ செய்தியின் படி இந்திய நேரம் நள்ளிரவில் இருந்து வியாழ கிழமை அதிகாலை 4.30 வரை இத்தாக்குதல் நடைபெற்றதாகவும் ஏழு தீவிரவாத நிலைகள் மீது உலங்கூர்தி, தரைப்படையினர் கொண்டு தாக்கதல் நடத்தப்பட்டதாக அறியமுடிகிறது. சில தகவல்கள் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது.


தாக்குதலுக்கு உள்ளான தீவிரவாத நிலைகள் இந்திய கட்டுப்பாட்டு காசுமீர எல்லையில் இருந்து இரண்டு முதல் மூன்று கிமீ தொலைவுக்குள் இருந்தன ஒரு வாரமாக இத்தளங்கள் கண்காணிப்பில் இருந்தன. இந்திய தரப்பில் உயிர் சேதம் இல்லை. பாக்கிதான் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் படி தாக்குதல்கள் பிம்பர், ஆட்இசுபிரிங், கேல் & லிபா பகுதிகளில் நடந்தது.


10 கிமீ தூரத்துக்கு பஞ்சாபின் பாக்கித்தானின் எல்லையோரத்தில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர்.


பாக்கித்தான் இராணுவம் வியாழன் அதிகாலையிலிருந்து ஆறு மணி நேரம் சண்டை நடந்ததாக தெரிக்கிறது. இந்திய கட்டுப்பாட்டு காசுமீரில் நடந்த யூரி தாக்குதலுக்கு பதில் அடியாக இது நடந்ததாக கருதப்படுகிறது.

மூலம்

தொகு