இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு

சனி, நவம்பர் 25, 2017

பாக்கித்தான் சட்ட அமைச்சர் சமிட் அமிது இசுலாம் மதத்துக்கு இகழ்ச்சி ஏற்படும் படி செய்துவிட்டார் என்று கூறி அவரை பதவி விலகச்சொல்லி பாக்கித்தான் தலைநகர் இசுலாமாபாத்தை இரு வாரங்களாக தீவிரவாத முசுலிம் கட்சிகளான தெக்ரிக் இ காடம் இ நபுவாட், தெக்ரிக் இ லாபாயிக் யா ரசூல் , பாக்கித்தான் சுன்னி தெக்ரீக் முற்றுகையிட்டுள்ளன. இதை முன்னின்று நடத்துபவர் தெக்ரிக் இ லாபாயிக் யா ரசூல் கட்சியின் தலைவர். இம்முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.


இச்செயல்களுக்கு தொக்காவில் ஒளிபரப்பப்பட்ட நேரலை காட்சிகள் காரணம் என்பதால் அரசு தொக்காவைத் தவிர மீதி அனைத்து தொக்காக்களும் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.


பாக்கித்தானின் தேர்தல் சீரமைப்பு சட்டத்தில் காடம்-இ-நபுவட் ( Khatam-e-Nabuwat) பிரிவை நீக்கிவிட்டதாக அவை கூறுகின்றன. ஆனால் அப்பிரிவை நீக்கவில்லை என்றும் எளிமை படுத்துவதற்காக மீது முழுபற்றுடன் ஆணையிட்டு (I solemnly swear) என்பதற்கு பதில் நான் நம்புகிறேன் (I believe) என்று சொல் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.


மூலம்

தொகு