வாருங்கள், Mohamed ijazz!

வாருங்கள் Mohamed ijazz, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Mohamed ijazz, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 09:29, 8 ஜனவரி 2014 (UTC)

வணக்கம் இஜாஸ், விக்கிசெய்தியில் பழைய ஒரு செய்தியில் மாற்றங்கள் செய்வது விரும்பத்தக்கதல்ல. அச்செய்தி குறித்து புதிய தகவல்கள் வெளிவந்தால் அதைப் பற்றி புதிய செய்தி (புதிய கட்டுரை) ஒன்றைத் தொடங்கி எழுதுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 10:26, 22 ஜனவரி 2014 (UTC)

வணக்கம் மீண்டும். வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை முழுமையாக பிரதி பண்ணி எழுதுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டு மூன்று மூலங்களில் இருந்து வெளிவந்த செய்தி ஒன்றைத் தொகுத்து எழுத வேண்டும். வரிக்கு வரி பிரதி பண்ணி எழுதாதீர்கள். அவை உடனடியாக நீக்கப்படும். நன்றி.--Kanags \பேச்சு 08:46, 24 ஜனவரி 2014 (UTC)

செய்தி எவ்வாறு எழுதப்பட வேண்டும்?

தொகு

விக்கிசெய்திகளில் செய்திகள் எழுதுவதற்கு சில நடைமுறைகள் உண்டு. இந்தியத் தமிழ் ஊடகங்களில் எழுதுவது போல் எழுதக் கூடாது. இந்தியத் தமிழ் ஊடகங்களில் செய்தி ஒன்றை எழுதும் போது, செய்தி பற்றிய வரலாற்றை முதலில் தந்து விட்டே பின்னர் இன்றைய செய்தியைத் தருவார்கள். இவ்வாறாக ஊடகவியலாளர்கள் எழுதக் கூடாது. முதலில் அன்றைய செய்தியை சுருக்கமாக எழுதிய பின்னர், அது குறித்த வரலாற்றை எழுத வேண்டும். உ+ம்: //கடந்த வருடம் முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளையில் 111 இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். குறித்த மீனவர்கள் இலங்கை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் ரீ.சரவணராஜா விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார்.// இவ்வாறு செய்தியை ஆரம்பிப்பது தவறு. இது பின்வருமாறு எழுதப்படலாம்:

//கடந்த ஆண்டு முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 111 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.// என எழுதலாம்.--Kanags \பேச்சு 06:45, 25 ஜனவரி 2014 (UTC)

செய்தி வெளியீடு

தொகு

நீங்கள் எழுதும் செய்திகளுக்கு publish வார்ப்புருவை சேர்க்காதீர்கள். வேறு அனுபவம் வாய்ந்த பயனர்கள் செய்தியை சரிபார்த்து வெளியிடுவார்கள். புரிதலுக்கு நன்றி.--Kanags \பேச்சு 07:10, 25 ஜனவரி 2014 (UTC)

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம் என்ற செய்தி தமிழ் புலம்பெயர் ஊடகங்களைத் தவிர இலங்கையின் உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்துள்ளதா? அப்படியாயின் அவற்றின் இணைப்பையும் தாருங்கள். வெறும் வதந்தி அடிப்படையிலான இவ்வாறான செய்திகளைத் தவிருங்கள். நடந்த நிகழ்வுகளைத் தருவதே விக்கிசெய்தியின் முக்கிய நோக்கம்.--Kanags \பேச்சு 11:22, 26 ஜனவரி 2014 (UTC)

படிமங்கள்

தொகு

காப்புரிமையுள்ள படிமங்களை விக்கிசெய்தியில் இணைகாதீர்கள். அவற்றை நீங்கள் பொதுவகத்தில் உங்கள் சொந்தப் படங்களாகத் தெரிவித்து தரவேற்றியிருந்தாலும், அவை அங்கு விரைவாக நீக்கப்படலாம். எனவே நீங்கள் சொந்தமாக உங்கள் காமிரா மூலம் எடுத்த, அல்லது பொதுவகத்தில் ஏற்கனவே உள்ள பகிரப்பட்ட படிமங்களையே இங்கு இணையுங்கள். நிஷா பிஸ்வால் படம் நீங்கள் எடுத்ததா?--Kanags \பேச்சு 11:24, 1 பெப்ரவரி 2014 (UTC)

மன்னிப்பு

தொகு

இல்லை நிஷா பிஸ்வால் படத்தை நான் எடுக்கவே இல்லை எனது நண்பன் ஜியா ச்லாம் (ஊடகவியலாளர்)எனக்கு தந்து உதவினார் அதை நான் சிறிது மாற்றி அமைத்து வெளியிட்டேன் தவறுக்கு வருந்துகிறேன் மொஹம்மத் இஜாஸ்

இதற்கெல்லாம் மன்னிப்புக் கேடகத் தேவையில்லை.:) அப்படம் பொதுவகத்தில் தரவேற்றிய படியால் அவர்கள் அது குறித்துப் பார்த்துக் கொள்வார்கள். பொதுவகத்தில் தரவேற்றும் படிமங்களுக்கு ஆங்கிலப் பகுப்புகள் இட வேண்டும். வேறு மொழிப் பகுப்புகள் இட முடியாது.--Kanags \பேச்சு 08:10, 5 பெப்ரவரி 2014 (UTC)

புதிய வெளியீடு

தொகு

எழுதும் இனி நான் செய்திகளுக்கு publish வார்ப்புருவை சேர்த்துக்கொள்ளலாம

உங்கள் செய்திகளில் நான் செய்யும் திருத்தங்களை நீங்கள் கண்டுகொள்வதாகத் தெரியவில்லையே.--Kanags \பேச்சு 08:39, 5 பெப்ரவரி 2014 (UTC)

எனக்கு ஆசிரியனாக , நண்பராக, வழிகாட்டியாக இருக்கும் உங்களது ஆதரவு எனக்கு எப்போதும் தேவை நீங்கள் எனக்கு செய்த எல்லா சேவைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா . --Mohamed ijazz \பேச்சு 7 பெப்ரவரி 2014 (UTC)

எழுத்தாளனாக முயற்சி

தொகு

என் தவறுகளை கண்டு துவண்டதில்லை வெற்றியை தேடி விரைகிறேன் விடாமுயற்சியோடு தவறுகளால் வெற்றிக்கான அனுபவங்களை கற்றுகொண்டிருக்கிறேன் எனது தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் தவறுகளை எனக்குள்ளே தேடி சரி செய்துகொண்டு நான் தன்னம்பிக்கையோடு விரைகிறேன் முயற்சி யோடு எனது எதிர்கால வெற்றிகளுக்கு கடந்தகால தவறுகளை உரமாக்குகிறேன் முயற்சி என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டிருக்குறேன் எனது கட்டுரையில் யாராவது தவறு கண்டுபிடித்தால், அதை மனப்பூர்வமாக வரவேற்று, எனது தவறை உடனே திருத்திக்கொள்கிறேன்.தவறுகளை அடையாளம் காட்டித்தந்த நபர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் வெற்றியை நோக்கி பயணிக்கிறேன் Mohamed ijazz

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mohamed_ijazz&oldid=35525" இலிருந்து மீள்விக்கப்பட்டது