விக்கிசெய்தி:நீங்கள் செய்தி எழுதலாம்!

விக்கிசெய்திக்கு உங்களை வரவேற்கிறோம்! விக்கிசெய்தி ''உங்களால் நீங்களே கண்டு தொகுத்து எழுதும் செய்திக்கட்டுரைகள் அடங்கிய செய்தியூடகம். இங்கு, நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு செய்தியும் உங்களைப் போன்ற ஒருவர் எழுதியதே. இங்குள்ள எந்த ஒரு கட்டுரையையும் நீங்கள் திருத்த முடியும், அல்லது விரிவாக்க முடியும். ஒரு செய்தியில் நீங்களே சம்பந்தப்பட்டு இருந்தால், நடுநிலைமை கருதிப் புறவய நோக்கில் எழுதுவதற்கு, வேறு ஒரு விக்கிப்பயனரை நாடவும்.

விக்கிசெய்திக் கட்டுரைகள் என்பது யாது ?

முதலில் சொல்ல வேண்டியது, விக்கிசெய்தியானது ஒரு நடுநிலைத்தன்மையுடன் எழுதப்படுவதாகும். தங்கள் சொந்தக் கருத்துகளை தொகுக்க வேண்டாம்.

தொகுப்பாக்கம்

ஒரு செய்தி தொடர்பாகப் பல்வேறு நம்பத் தகுந்த ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை வைத்து, ஒரு தொகுப்புச் செய்திக் கட்டுரையை எழுதலாம். ஊடகங்களை மேற்கோளாகக் காட்டுவது மிகவும் தேவையானது.

மூலச் செய்தியாக்கம்

ஒரு செய்தி நிகழ்வைப் பற்றி நீங்கள் நேரடியாகப் பதிவு செய்யலாம். இயன்றவரை தகுந்த ஆதாரங்களை வழங்கவும். மேலும், உங்களின் 'மூலச் செய்தி' என்றும் குறிப்பிடவும்.

அனைத்து செய்திகளும் ஒரு கூட்டுமுயற்சியாகும். எந்த செய்தியை ஒருவர் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்பதில்லை. எல்லோரும் எல்லாச் செய்திகளையும் தொகுக்கலாம்.

தங்களிடம் வேண்டுவன

தங்களிடம் விக்கிசெய்தி பின்வரும் அறிவுரையின்படி கட்டுரைகளை எழுத வேண்டுகிறது.

  • நீங்கள் விரும்புவதாக இருப்பதை: தங்களுக்கு விருப்பம் உண்டென்றால் அதேப் போன்று பிறருக்கும் விருப்பமுள்ளதாக இருக்கும் என்பதால் அவ்வகையானவற்றை எழுதுங்கள்.
  • சரிவர தகவல்கள் எழுதப்படாமல் இருப்பதை: ஒரு சர்ச்சையைப் பற்றிய சரியாக எழுதப்படாமல் இருப்பதை நீங்கள் எழுதுங்கள்.
  • தங்களுக்கு முக்கியமென தோன்றுவதை: நீங்கள் எழுதும் செய்திகள் தங்கள் நகரத்தில் மட்டும் உள்ளதோ, அல்லது உலகளாவிய செய்தியோ எதுவானாலும் தங்களுக்கு முக்கியமென தோன்றினால் அதனை எழுதலாம்.

இங்கு எழுதப்பட்டிருக்கும் செய்திகளையும் மேலும் வளர்த்து எடுக்க தங்களை வேண்டுகிறோம். இங்கு எழுதப்பட்டிருக்கும் செய்திகளில் ஏதேனும் தவறான செய்திகள் உண்டென்றாலும் அதனை திருத்த வேண்டுகிறோம்.

எழுதத் தொடங்கவும்

முழு அறிமுக தளமான விக்கிசெய்தி:அறிமுகம் என்பதைப் படிக்கவும்.

விக்கிசெய்தி கட்டுரைகள் எப்படி எழுதப்படுகிறது என்பதை அறிய, விக்கிசெய்தி:கட்டுரை எழுதுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

புதிய தலைப்பின் கீழ்க் கட்டுரை தொடங்குக