வாருங்கள், ஜெ.மயூரேசன்!

வாருங்கள் ஜெ.மயூரேசன், உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் ஜெ.மயூரேசன், உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 12:42, 8 ஜனவரி 2010 (UTC)


நன்றி ;) தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு செய்தியாவது எழுதுவோம் என்று யோசிக்கின்றேன் --ஜெ.மயூரேசன் 12:44, 8 ஜனவரி 2010 (UTC)

வணக்கம் மயூரேசன், வாருங்கள். சேர்ந்து எழுதுவோம். நீங்கள் அறிந்த செய்திகளை மற்றவர்களுடன் பகிர விரும்பும் செய்திகளை எழுதுங்கள். உங்கள் முதல் செய்தியே நல்ல தரத்துடன், விக்கி முறைப்படி எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஏனையோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 03:54, 9 ஜனவரி 2010 (UTC)

நிச்சயமாக.. அப்படியே ஆகட்டும் ;) --ஜெ.மயூரேசன் 10:36, 9 ஜனவரி 2010 (UTC)

தகவல்சட்டம்

தொகு

செய்தி சில வேளைகளில் தகவல்சட்டத்தில் தோன்ற சிறிது நேரம் ஆகலாம். சிலவேளை சில மணி நேரம் அல்லது ஒரு நாள் கூட ஆகலாம். நான் காலையில் எழுதிய அங்கோலாச் செய்தி இன்னமும் தகவல் பெட்டியில் வரவில்லை.--Kanags \பேச்சு 11:29, 9 ஜனவரி 2010 (UTC)

தகவலுக்கு நன்றி.. ஒரு நாள் கூட ஆகுமா???? ம்.... --ஜெ.மயூரேசன் 13:52, 9 ஜனவரி 2010 (UTC)

நீக்கல் வார்ப்புரு

தொகு

மயூரேசன், நீக்க விரும்பும் கட்டுரைகளுக்கு (விசமக் கட்டுரைகள்) கட்டுரையின் ஆரம்பத்திலேயே delete வார்ப்புருவை இணைத்து விடுங்கள்.--Kanags \பேச்சு 22:55, 11 ஜனவரி 2010 (UTC)

செய்தியோடை

தொகு

செய்தியோடை குறித்த தங்களின் முன்னெடுப்புகளுக்கு நன்றி.--Kanags \பேச்சு 23:09, 11 ஜனவரி 2010 (UTC)

;) இதுக்கேல்லாம் நன்றியா --ஜெ.மயூரேசன் 04:01, 12 ஜனவரி 2010 (UTC)

புதிய வார்ப்புரு

தொகு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வார்ப்புரு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 ஒன்றைத் தொடங்கியுள்ளேன். தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு இவ்வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். பழைய செய்திகளுக்கு வார்ப்புருவை மாற்ற வேண்டாம். அப்படியே இருக்கட்டும். ஏனென்றால், பழைய செய்திகளில் ஏதும் மாற்றங்கள் இப்போது செய்தால், வார்ப்புருவில் கடைசி மாற்றத் தேதி தான் குறிக்கப்படும். அதாவது பழைய செய்தி வார்ப்புருவில் புதிய செய்தி ஆகி விடும். இதுவும் ஒரு வழுதான். அதனை எப்படிச் சரி செய்வது என்று தெரியவில்லை. பழைய செய்திகளை இரண்டு நாட்களுக்குப் பிறகு எவரும் மாற்ற முடியாதபடி காப்பிடுவது குறித்து சிந்திக்கிறேன். ஆங்கில விக்கிசெய்திகளில் அப்படிக் காப்பிடுகிறார்கள். உங்கள் அபிப்பிராயம் என்ன?--Kanags \பேச்சு 07:41, 12 ஜனவரி 2010 (UTC)

அப்படியே ஆகட்டும். எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. அப்படி செய்யவேண்டியதும் விக்கியின் வழுவினால் கட்டாயத் தேவையாகின்றது என்பது என்பதே என் கருத்து. --ஜெ.மயூரேசன் 08:10, 12 ஜனவரி 2010 (UTC)

செய்தியோடை

தொகு

மயூரேசன், செய்தியோடை இப்போது வேலை செய்கிறது. பாருங்கள்.[1]. இன்னும் மேம்படுத்த இடமுண்டு. இன்றில் இருந்து இடப்படும் செய்திகளுக்கு வார்ப்புரு:Published ஐ பகுப்புகளுக்கு சற்று மேலே இணைக்க வேண்டும். இவ்வார்ப்புருவை இடமுன்னர் செய்திகளை (தலைப்பு, இணைப்புகள் போன்றவற்றை) சரிபார்ப்பது நல்லது. இன்றில் இருந்து வெளிவரும் செய்திகள் செய்தியோடையில் இணைக்கப்படும். இவ்வார்ப்புருவை இட்ட பின்னர் செய்தியில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். --Kanags \பேச்சு 12:34, 12 ஜனவரி 2010 (UTC)

ஆகா அருமை... செய்தி தலைப்பே உள்ளடக்கமாகவும் வருகின்றதே இதை திருத்த முடியாதா??? இனிமேல் சரிபார்த்தபின்னர் வார்ப்புரு:Published வார்ப்புருவை இடுகின்றேன். எப்படி செய்தியோடைகள் வேலைசெய்யத்தொடங்கியது... வார்ப்புரு:published ஆல்தான் இதுவரை வேலைசெய்யாமல் இருந்ததா? --ஜெ.மயூரேசன் 12:49, 12 ஜனவரி 2010 (UTC)
இப்போது கூகிளின் Feedburner இல் தொடுப்புக் கொடுத்திருக்கிறேன். http://feeds.feedburner.com/LatestTamilWikinews. (ஆங்கில விக்கியிலும் அப்படியே செய்திருக்கிறார்கள்). அனைத்துச் செய்திகளுக்கும் ஒரு பொது Category இருந்தாலே அது செய்திகளைச் சேகரிக்கும். இதனாலேயே Published வார்ப்புருவை இணைத்தேன். முதலில் தமிழில் வெளியீடு என்ற பகுப்பைச் சேர்த்துப் பார்த்தேன். வரவில்லை. அதனாலேயே ஆங்கிலத்தில் இட வேண்டியதாகப் போய்விட்டது. இப்போதைக்குத் தலைப்புகள் மட்டுமே உள்ளடக்கத்திலும் வருகிறது. ஆங்கில விக்கியில் ஆரம்பத்தில் இப்படியே வந்தது. இப்போது அவர்கள் சிறிது முன்னேற்றியிருக்கிறார்கள். கண்டுபிடிப்போம். இலங்கைச் செய்திகளின் RSS இல் ஏன் பழைய செய்திகள் தெரிகின்றதோ தெரியாது. கண்டுபிடிக்க வேண்டும்.--Kanags \பேச்சு 13:57, 12 ஜனவரி 2010 (UTC)
அருமை அருமை.. ஆமாம் கவனித்தேன் ஆங்கில விக்கியிலும் அவ்வாறுதான் செய்துள்ளார்கள். தொடர்ந்து பங்களித்தவாறே நுட்பவிடையங்களிலும் ஆராய்ந்து பார்ப்போம். நன்றி --ஜெ.மயூரேசன் 16:04, 12 ஜனவரி 2010 (UTC)

Lead Article

தொகு

நீங்கள் செய்தது சரியே. உடனடிச் செய்திகளுக்கு Breaking News படிமத்தைச் சேர்க்கலாம். தவறில்லை. Breaking News என்பதற்கு நல்ல தமிழ்ச் சொற்றொடர் சொல்லுங்கள். தமிழ்ப்படுத்திப் புதிய படிமத்தை Commons இல் பதிவேற்றலாம்.--Kanags \பேச்சு 12:18, 13 ஜனவரி 2010 (UTC)

செய்தியோடை 2

தொகு

மயூரேசன், நீங்கள் எந்த பிரௌசர் பாவிக்கிறீர்கள்? நான் IE7 தான் பாவிக்கிறேன். IE இல் செய்தியோடை (toolserver) நன்றாகத் தெரிகிறது. கூகிள்குரோமில் அவ்வளவு நன்றில்லை. கூகிள்குரோமில் feedburner நன்றாகத் தெரிகிறது. feedburner இல் ஒரு குறை. உடனடியாக feed பண்ணுவதில்லை சில மணி நேரம் ஆகிறது. உங்களுக்கு எப்படி? பலர் இப்போது கூகிள்குரோம் தான் பாவிக்கிறார்கள். அப்படியா? மறுபடியும் முன்பக்கத்தொடுப்பில் feednurner இற்கு மாற்றி விடலாமா?--Kanags \பேச்சு 12:33, 13 ஜனவரி 2010 (UTC)

நன்றி...

தொகு

வணக்கம், மயூரேசன்! விக்கிசெய்தியில் நீங்கள் மீண்டும் முனைப்புடன் செயல்படுவது, மிகுந்த மகிழ்ச்சியினைத் தருகிறது. சிறீதரன் அவர்களின் பணிச்சுமையும் இதன் காரணமாக குறையும் என்பதில் ஐயமில்லை; நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:31, 17 ஜனவரி 2014 (UTC)

மிக்க நன்றி செல்வகுருநாதன். இயன்றவரை தொடர்ந்து பங்களிக்க முயல்கின்றேன் --ஜெ.மயூரேசன் (பேச்சு) 04:35, 17 ஜனவரி 2014 (UTC)
"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஜெ.மயூரேசன்&oldid=35145" இலிருந்து மீள்விக்கப்பட்டது