படகு அகதிகளை மலேசியாவுக்கு அனுப்ப ஆத்திரேலிய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

திங்கள், ஆகத்து 8, 2011

ஆத்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாகப் படகுகளில் வந்த அகதிகளை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு ஆத்திரேலிய உச்ச நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது. இவர்களை மலேசியாவுக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


இத்திட்டம் குறித்து மேலும் ஆராயப் படவேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இம்மாத இறுதியளவில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் வரை அகதிகள் பரிமாற்ரம் நிறுத்தி வக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.


அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 800 சட்டவிரோத அகதிகளை மலேசியாவுக்கு அனுப்பும் ஆத்திரேலிய அரசின் திட்டம் நீதிமன்றத்தின் இந்த அறிவித்தலால் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலியா கிலார்டின் அரசு மலேசிய அரசுடன் செய்துகொண்டுள்ள உடன்பாட்டின் படி, மலேசியாவில் அகதிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட 4,000 பேரை ஆத்திரேலியாவுக்குள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படும்.


அவுஸ்திரேலிய அரசாங்கம் மலேசியாவிற்கு முதலாவது தொகுதியாக 16 அகதிகளை இன்று காலை 11.30 மணிக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வந்தது. இவர்கள் அனைவரும் ஆப்கானித்தான், மற்றும் பாக்கித்தான் நாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை தங்களுக்கு துன்பம் விளைவிக்கப்படும் என்று அகதிகள் அஞ்சுகின்றனர் என்று அவர்கள் சார்பில் பேசவல்ல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து தெரிவித்தனர்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு