இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், அக்டோபர் 6, 2016

ஏரியான்-5 ஏவுதளம்

இந்தியாவின் சிசாட்-18 ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஏரியான்-5 விண்கலம் மூலம் பிரெஞ்சு கயானாவின் இக்குரவுலிருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது..


சிசாட்-18 3,404 கிலோ எடையுடைய தகவல் தொடர்பு செயற்கை கோளாகும். இதில் 48 அலை வாங்கி செலுத்திகள் உள்ளன. இது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஏரியான் ஏவுகலம் மூலம் செலுத்தும் 20 ஆவது செயற்கை கோளும் ஏரியானின் 280 ஏவுதலும் ஆகும்.


புதன்கிழமை ஏவ திட்டமிடப்பட்டு வானிலை சரியில்லாததால் 24 மணி நேரம் கழித்து வியாழக்கிழமை ஏவப்பட்டது.


தற்போது இந்தியாவிற்கு 14 செயல்படும் தகவல் செயற்கை கோள்கள் உள்ளன. எடை கூடிய செயற்கை கோள்களுக்கு இப்போது ஏரியான் ஏவுகலத்தையே இந்தியா நம்பியுள்ளது இதை தவிர்க்க சிஎசுஎல்வி எம்கே III ஏவுகலத்தை இந்தியா உருவாக்குகிறது.


காலை 2 மணிக்கு ஏரியான்-5 விஏ-231 ஏவப்பட்டது. ஆத்திரேலிய இசுக்கை முசுட்டர் 2 ஏவப்பட்ட பின் ஏவுகலம் ஏவப்பட்ட 32 நிமிடங்களில் சிசாட்-18 புவிநிலைச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்டது.


அடுத்த ஆண்டு சிசாட்-17 & சிசாட்-11 ஏரியான் மூலம் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் தெரிவித்தார்.


மூலம்

தொகு