கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது

ஞாயிறு, திசம்பர் 15, 2024

ஏரியான்-5 ஏவூர்தி

ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ செயற்கைகோள் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது உலகின் மிக துல்லியமான செய்மதி இடஞ்சுட்டலாக இருக்கும் என நம்பப்படுகிறது.


பணபற்றாக்குறை முதலான பல்வேறு இடைஞ்சல்களை தாண்டி 17 ஆண்டுகள் கழித்தே செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


கலிலியோ அமைப்பு முழுமையாக செயல்பட 24 செயற்கைகோள்கள் தேவை. இப்போது 18 செயற்கைகோள்கள் மட்டு்மே ஏவப்பட்டுள்ளது. இதன் செயற்கை கோள்கள் உருசியாவின் சோயசு ஏவுவூர்தி மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டன. இறுதி 4 செயற்கை கோள்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏரியான்-5 ஏவூர்தி மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டன.


குடிசார் அமைப்புகளால் இது இயக்கப்படும், அமெரிக்காவினதும் உருசியாவினதும் இராணுவத்தால் இயக்கப்படுபவை. இராணுவத்தால் இயக்கப்படுபவையால் சேவை பாதிக்காது என்பதற்கு உறுதி இல்லை. ஏனென்றால் போர்களின் போது மற்றவர்களின் சேவை தடுக்கப்படலாம்.


கலிலியோ அமைப்பு 2008ஆம் ஆண்டு செயற்பாட்டுக்கு வரும் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இவ்வமைப்பு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மூலம் உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்தியா, இசுரேல், சௌதி அரேபியா, தென் கொரியா போன்ற பல்வேறு ஐரோப்பிய ஒன்றியத்தி்ல் இல்லாத நாடுகளும் இத்திட்டத்திற்கு உதவியுள்ளன.


மூலம்

தொகு