காற்பந்து 2010: இத்தாலி முதற்சுற்றில் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது

வெள்ளி, சூன் 25, 2010

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 2010-உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சென்ற முறை உலகக்கிண்ணத்தை வென்ற இத்தாலி தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.


படிமம்:Zakumi original.jpg
சக்குமி, 2010 தொடரின் சின்னம்

நேற்று முடிவடைந்த முக்கியமான முதற்சுற்றுப் போட்டியொன்றில் சிலவாக்கியா அணி இத்தாலி அணியை 3-2 என்கிற கோல் கணக்கில் வென்றது.


முன்னதாக பிரான்ஸ் அணியும் முதற்சுற்று ஆட்டம் ஒன்றில் தென்னாப்பிரிக்க அணியுடன் மோதி 1:2 என்ற கோல் கணக்கில் தோற்று ஆட்டத்தில் இருந்து வெளியேறி இருந்தது. இதன் மூலம் சென்ற உலகக்கிண்ண ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு அணிகளும் இம்முறை முதற்சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நேற்றைய ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்திலும், 73 ஆவது நிமிடத்திலும் சிலவாக்கிய அணியின் ராபர்ட் விட்டேக் அடித்த கோல்கள், இத்தாலியை உலகக் கோப்பையை விட்டு வெளியேற வழி வகுத்தது.


F பிரிவில் பராகுவே மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், பராகுவே அணியும் இதே பிரிவில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.


சிலவாக்கியா அணி திங்கட்கிழமை அன்று 16 அணிகளுக்கிடையேயான சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணியுடம் மோதும். பாராகுவே செவ்வாய்க்கிழமை அன்று ஜப்பான் அணியை எதிர்த்து விளையாட விருக்கிறது.


மூலம்