மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, ஏப்பிரல் 19, 2015

ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு புலம் பெயர முயன்றவர்களை ஏற்றிச்சென்ற மீன்பிடி படகு மத்திய தரைக்கடலில் விபத்தில் சிக்கியதில் குறைந்தது 700 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


இப்படகு வடக்கு லிபியாவில் இருந்து புறப்பட்டது. 20 மீட்டர் நீளமுடைய இப்படகு லிபியாவின் கடற்கரையில் இருந்து 70 மைல் தொலைவில் மூழ்கியது. இவ்விபத்தில் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக சிசிலி கொண்டு செல்லப்பட்ட வங்காளதேசத்தவர் படகில் 950 பேர் இருந்ததாக கூறினார். முன்னதாக அதிகாரிகள் விபத்து நடந்த படகில் 700 பேர் இருந்ததாக கூறினர்.


கடந்த ஆண்டு 219,000 பேர் கடலை கடந்து ஐரோப்பாவுக்கு பத்திரமாக வந்ததாகவும் 3,500 பேர் இறந்ததாகவும், இவ்வாண்டு 35,000 கடலை கடந்து ரோப்பாவுக்கு பத்திரமாக வந்ததாகவும் 3,500 பேர் இறந்ததாகவும் இது வரை 900 பேர் கடலை கடக்கையில் இறந்துள்ளதாகவும் ஐநாவின் அகதிகளுக்கான தலைவர் கூறினார்.


இது வரை 28 பேர் காப்பாற்றபட்டுள்ளதாக தெரிகிறது. இத்தாலிய கடற்படையும் கடலோர காவற்படையும் வானூர்தியும் தேடுதலிலும் மீட்புபணியிலும் ஈடுபட்டுள்ளன.


மூலம்

தொகு

Mediterranean migrant boat tragedy: Death toll could rise to 950 டெலிகிராப், 2015 ஏப்பிரல் 19