ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகள் 16 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டனர்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

புதன், திசம்பர் 30, 2009


ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச்சென்ற வழியில் இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களில் 47 பேர் மறுவாழ்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கும் ருமேனியாவுக்கும் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஒரு தொகுதியாக கொண்டுவரப்பட்ட 78 இலங்கை தமிழர்களில் 47 பேர் இன்று அனுப்பப்பட்டிருப்பதாக, இந்தோனேசியாவின் மேற்குப்பிராந்தியத்தை சேர்ந்த சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் இகெடே வித்தியார்த்த அவர்கள் தெரிவித்திருக்கிறார்.


செவ்வாய்கிழமை காலை சுமார் ஆறு மணிக்கு சென்ற இவர்களில் 16 பேர் ருமேனியாவுக்கும், 31 பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றுள்ளனர். மீள்குடியேற்றத்திற்காக இவர்கள் அங்கு அனுப்பப்படுவதாக "ஜகார்த்தா குளோப்" பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது


இந்த மாத முற்பகுதியில் இக்கப்பலிலிருந்த 15 தமிழர்களை கனடாவும் அவுஸ்திரேலியாவும் ஏற்றிருக்கின்றன. மீதமுள்ள 16 பேரும் விரைவில் வேறு ஒரு நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்களுக்கான பயண ஆவனங்கள் தயாரானதும் அவர்களின் பயணம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.


அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் இலங்கையர், ஆப்கானிஸ்தானியர், ஈராக்கியர்களுக்கு கேந்திர இடமாக இந்தோனேசியா உள்ளது.

மூலம்

தொகு