இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

சனி, மார்ச்சு 19, 2011

இலங்கையில் கடந்த வியாழன் அன்று 234 உள்ளூராட்சி சபைகளுக்காக நடைபெற்ற தேர்தல்களில் வட, கிழக்கு மாகாணங்களில் 14 சபைகளுக்காகப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 சபைகளைக் கைப்பற்றியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தனியான சின்னம் ஒதுக்கப்படாததால் அது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மொத்தமாக 70,171 வாக்குகளைப் பெற்று 76 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 12 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியதன் மூலம் நாடளாவிய ரீதியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அடுத்த பலம்வாய்ந்த கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு பிரதேச சபைகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது. அதேபோல பொத்துவில் பிரதேச சபையில் போட்டியிட்டு ஒரேயொரு ஆசனத்தை மாத்திரமே பெற்றது. இதேவேளை, வடக்கில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியாவில் நடந்த தேர்தலில் முசலி பிரதேச சபை தவிர்ந்த சகல சபைகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

வடகிழக்கு மாவட்டங்களின் முடிவுகள்:

மன்னார் மாவட்டம்
  • மன்னார் நகர சபை:
    • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 05 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்
  • மன்னார் பிரதேச சபை
    • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 05 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்
    • சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 02 ஆசனங்கள்
  • மாந்தை மேற்கு பிரதேச சபை
    • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 04 ஆசனங்கள்
    • சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்
  • நானாட்டான் பிரதேச சபை
    • இலங்கை தமழரசுக் கட்சி - 06 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 03 ஆசனங்கள்
  • முசலி பிரதேச சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள்
    • சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 02 ஆசனங்கள்
    • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 01 ஆசனம்
வவுனியா மாவட்டம்
  • வவுனியா தெற்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச சபை
    • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்
    • ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்
  • வெண்கலச் செட்டிக் குளம் பிரதேச சபை
    • இலங்கை தமிழரசுக் கட்சி - 05 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்
    • சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 02 ஆசனங்கள்
  • வவுனியா தெற்கு பிரதேச சபை
    • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 08 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 04 ஆசனங்கள்
    • ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்
முல்லைத்தீவு மாவட்டம்
  • மாந்தை கிழக்கு பிரதேச சபை
    • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 6 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 3 ஆசனங்கள்
அம்பாறை மாவட்டம்
  • பொத்துவில் பிரதேச சபை
    • இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 06 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்
    • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 01 ஆசனம்
  • நாவிதன்வெலி பிரதேச சபை
    • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 04 ஆசனங்கள்
    • சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்
    • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 01 ஆசனம்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 01 ஆசனம்
  • ஆலையடிவேம்பு பிரதேச சபை
    • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 05 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்
    • சுயேட்சைக் குழு (01) - 01 ஆசனம்
    • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 01 ஆசனம்
திருகோணமலை மாவட்டம்
  • திருகோணமலை நகர சபை
    • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 08 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்
    • ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்
    • ஜே.வி.பி- 01 ஆசனம்
  • வெருகல் பிரதேச சபை
    • இலங்கை தமிழரசுக் கட்சி - 05 ஆசனங்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 01 ஆசனம்
    • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 01 ஆசனம்
  • மூதூர் பிரதேச சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள்
    • இலங்கை தமிழரசுக் கட்சி - 03 ஆசனங்கள்
    • ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு