இந்தோனேசிய சுலாவெசித் தீவில் எரிமலை சீறல், மக்கள் வெளியேற்றம்
வெள்ளி, சூலை 15, 2011
- 3 மார்ச்சு 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்
- 14 திசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்
- 29 ஏப்பிரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை
- 28 திசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது
இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவில் உள்ள லோக்கோன் எரிமலை சீறத் தொடங்கியதை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறினர்.
நேற்று வியாழக்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்த எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. சேதங்கள் எதுவும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.
1,500 மீட்டர் உயரத்துக்கு தூசு, மணல், மற்றும் கற்கள் வீசப்பட்டதாக அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் இப்பகுதியில் எரிமலையின் தாக்கங்கள் மிக அதிகமாகக் காணப்பட்டிருந்தது. 3.5-கிமீ (இரண்டு மைல்) சுற்றுவட்ட மக்கள் வெளியேற்ற வலயம் சென்ற வாரம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பகுதியில் 28,000 பேர் வரை வசிக்கிறார்கள். இவர்களில் 4,400 பேர் ஏற்கனவே வெளியேறியுள்ளனர்.
"நாம் இதனை எதிர்பார்த்து மக்களை எச்சரித்துள்ளோம், இதனால் மக்கள் இது குறித்து பெரிதளவில் பயப்படவில்லை, ஆனாலும், அங்குள்ள மக்களை நாம் தொடர்ந்து வெளியேற்றி வருகிறோம்," என்றார் அரசு பேச்சாளர் கிறிஸ்டியாண்டோ.
1,580 மீட்டர் உயரமான இந்த எரிமலை கடைசியாக 1991 ஆம் ஆண்டு வெடித்தது. இந்தோனேசியாவில் உள்ள உயிருள்ள பல எரிமலைகளில் லோக்கோன் எரிமலை முக்கியமானதாகும்.
மூலம்
தொகு- Indonesians flee volcano eruption on Sulawesi, பிபிசி, சூலை 15, 2011
- Indonesian volcano erupts, kaartiyan, suulai 15, 2011