இந்தோனேசியாவின் ஆச்சே பகுதி கடலில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

ஞாயிறு, மே 9, 2010


இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்துக்கு அருகில், சுமாத்ரா தீவுக் கடலில் 7.4 அளவு நிலநடுக்கம் இன்று தாக்கியது.


ஆச்சே மாகாணத் தலைநகர் பண்டா ஆச்செயியில் இருந்து 214 கிலோமீட்டர் தெற்கே நிலநடுக்கம் இடம்பெற்றதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்தது.


உள்ளூரில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.


2004 ஆம் ஆண்டின் பெரும் நிலநடுக்கம் நிகழ்ந்த இடத்துக்கு அருகாமையிலேயே இன்றைய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


உள்ளூர் நேரப்படி இன்று பகல் 1259 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வீடுகள் சேதமடைந்ததாகவும், மின்கம்பிகள் அறுந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சுமாத்ராவின் வட-மேற்கு முனையில் ஆச்சே அமைந்துள்ளது. இங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழும் நிகழ்வாகும்.


சென்ற ஆண்டு மேற்கு சுமாத்ராவின் படாங் அருகே இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 2004 நிலநடுக்கத்தில் ஆச்சே பிராந்தியத்தில் மட்டும் 170,000 பேர் உயிரிழந்தனர்.

மூலம் தொகு