இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு '127 அவர்ஸ்' திரைப்படப் பாடலுக்காக விருது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், அக்டோபர் 25, 2011

பெல்ஜியத்தில் நடந்த உலக சவுண்ட் டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு '127 அவர்ஸ்' படத்தில் இடம்பெற்ற 'இஃப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக 'ப்பளிக் சாய்ஸ்' (பொதுத் தெரிவு) விருது கிடைத்துள்ளது.


இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்

கடந்த 2009-ம் ஆண்டு 'ஸ்லம்டாக் மில்லினர்' என்ற படத்துக்கு இசை அமைத்ததற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். ஸ்லம்டாக் மில்லினர் படத்தை இயக்கிய அதே டேனி பாய்லின் புதிய படம் தான் இந்த '127 அவர்ஸ்' (127 hours).


இந்த ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் 'இப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக சிறப்பான முறையில் இசையமைத்தமைக்காக ஏ. ஆர். ரகுமானின் பெயர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இவ்வாண்டு அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் 127 அவர்ஸ் படத்தில் சிறப்பாக இசையமைத்தற்காக 'பப்ளிக் சாய்ஸ்' விருது வழங்கப்பட்டது. 'இப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக ஏ. ஆர். ரகுமானுக்கு விமர்சகர்கள் விருதும் ஆண்டின் ஆரம்பத்தில் கிடைத்திருந்தது.


'எனக்கு பப்ளிக் சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று ஏ. ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு