ஆஸ்திரியாவில் நாட்சி-கால புதைகுழி மீளத் தோண்டப்படவிருக்கிறது

புதன், சனவரி 5, 2011

நாட்சி காலத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்கள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் பேரில் மேற்கு ஆஸ்திரியாவில் உள்ள மனநோய் மருத்துவமனையொன்று மீளத் தோண்டப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நாட்சிச் சின்னம்

வாழ்வதற்குத் தகுதியற்றவர்களாகக் கணிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான வலது குறைந்தோர் படுகொலை செய்யப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ் பலர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை நம்புகிறது. இதனை அடுத்து இம்மருத்துவமனையின் மீள்கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.


ஆத்திரியாவின் ஸ்குலோசு ஹார்ட்டெயிம் என்ற மனநோய் மருத்துவமனையில் மட்டும் 30,பேர் கொல்லப்பட்டனர். 1942 இற்கும் 1945 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இவர்கள் இம்மருத்துவமனையில் புதைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இது குறித்து ஆராயவென நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்படும் என டிரோல் மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். இக்கண்டுபிடிப்புகள் பற்றி நா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என அவர் தெரிவித்தார். "எமது வரலாற்றின் இருண்ட காலம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது" என அவர் கூறினார்.


புதைக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், இறப்புக்கான காரணம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை வட்டாரம் அறிவித்துள்ளது.


மூலம் தொகு