2012 நோபல் வேதியியல் பரிசு கணினி வேதியியலாளர் மூவருக்குக் கிடைத்தது

புதன், அக்டோபர் 9, 2013

2013 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு "வேதியியல் பரிசோதனைகளை இணையத்திற்குக் கொண்டு சென்றமைக்காக" மூவருக்கு அறிவிக்கப்பட்டது.


ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரித்தானிய-அமெரிக்கரான மைக்கேல் லெவிட், ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க-ஆத்திரியரான மார்ட்டின் கார்பிளஸ், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏரியா வார்செல் ஆகியோருக்கே வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.


வேதியியல் தாக்கங்களை ஆய்வு செய்வதற்கு கணிப்பொறி ஒப்புருவாக்கங்களை இவர்கள் உருவாக்கினர். இதன் மூலம் புதிய வகை மருந்து வகைகளைக் கண்டுபிடிப்பதற்கு அடித்தளம் இட்டுள்ளனர்.


மூலம் தொகு