2012 நோபல் அமைதிப் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டது
வெள்ளி, அக்டோபர் 12, 2012
- 11 அக்டோபர் 2013: சிரியாவில் வேதி ஆயுதங்களைக் கண்காணிக்கும் அமைப்புக்கு 2013 நோபல் அமைதிப் பரிசு
- 9 அக்டோபர் 2013: 2012 நோபல் வேதியியல் பரிசு கணினி வேதியியலாளர் மூவருக்குக் கிடைத்தது
- 12 அக்டோபர் 2012: 2012 நோபல் அமைதிப் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டது
- 10 அக்டோபர் 2012: 2012 இயற்பியல் நோபல் பரிசு பிரான்சியருக்கும் அமெரிக்கருக்கும் வழங்கப்பட்டது
- 1 சனவரி 2012: நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு 'சர்' பட்டம்
ஐரோப்பாவில் அமைதியை முன்னெடுக்க கடந்த ஆறு தசாப்தங்களாக பங்களித்தமைக்காக இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்படுகிறது.
ஐரோப்பாவை "போர்க் கண்டம் ஒன்றில் இருந்து அமைதிக் கண்டமாக" மாற்றியமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் பெரிதும் உதவியுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தற்போது நிகழும் நிதி நெருக்கடி, மற்றும் சமூகக் கொந்தளிப்பு போன்றவை பற்றித் தாம் அறிவோம் என நோபல் குழுவின் தலைவர் கூறினார். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரான்சுக்கும் செருமனிக்கும் இடையில் முரண்பாடுகளைத் தவிர்க்க, மற்றும் 1970களில் எசுப்பானியா, போர்த்துகல், கிரேக்கம் ஆகிய நாடுகள் ஆதிக்கவாதிகளின் பிடிகளில் இருந்து விடுவிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆற்றிய பங்கை அவர் பாராட்டினார்.
அமைப்பு ஒன்றுக்குக் கடைசியாக 1999 ஆம் ஆண்டில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புக்கு அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
மூலம்
தொகு- Nobel Peace Prize awarded to European Union, பிபிசி, அக்டோபர் 12, 2012
- 2012 Nobel Peace Prize Awarded to European Union, வாசிங்டன் போஸ்ட், அக்டோபர் 12, 2012