ஆஸ்திரியாவில் நாட்சி-கால புதைகுழியில் இருந்து 200 இற்கும் அதிகமானோரின் எச்சங்கள் மீட்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், நவம்பர் 15, 2011

நாட்சி கால புதைகுழி ஒன்றில் இருந்து 200-இற்கும் அதிகமானோரின் உடல் எச்சங்களைத் தாம் தோண்டி எடுத்திருப்பதாக ஆஸ்திரியாவின் டைரோல் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஹால் என்ற நகரில் மருத்துவமனையுடன் அண்டிய இந்தப் புதைகுழி இவ்வாண்டு ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பல்லாயிரக்கணக்கான வலது குறைந்தோர் இவ்வாறு நாட்சிகளால் கொல்லப்பட்டனர். இவர்கள் வாழ்வதற்குத் தகுதி இல்லாதவர்களாகக் கணிக்கப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் 220 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.


உடல் எச்சங்களின் பெரும்பாலானவைகள் நாட்சி காலத்தவை என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வுடல்களில் பெரும்பாலானவற்றில் எலும்புகள் உடைந்தும், காயங்களுடனும் காணப்பட்டுள்ளன. ஆனாலும் இவர்கள் எவ்வாறும் இறந்தார்கள் என்பதை அறிவதற்கு மேலும் ஆய்வுகள் தேவையாயுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தோண்டியெடுக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களின் 14 முதல் 90 வயது வரையானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் உறவினர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவமனை வட்டாரங்கள் தற்போது ஈடுபட்டுள்ளன. இது பற்றிய விசாரணைகள் 2013 ஆம் ஆண்டளவிலேயே நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு