அமெரிக்காவில் இந்திய வம்சாவளிச் சிறுவன் தனது 10வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தான்

வியாழன், சூன் 12, 2014

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ரமென்டோவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிஷ்க் ஆப்ரகாம் என்ற சிறுவன் தனது 10 வயதில் உயர் பள்ளி டிப்ளோமா முடித்து சாதனை செய்துள்ளான்.


இச்சிறுவன் 7ஆம் வகுப்பிற்குப் பின் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இந்த சாதனையை செய்துள்ளான். தனது 10 வயதிலேயே பள்ளி இறுதித்தேர்வை எழுதுவது தனக்கு கடினமாக இருந்தது என்று கூறினான். அடுத்து கல்லூரியில் படிக்க ஆயத்தமாக உள்ளான்.