தமிழ்நாட்டில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு
திங்கள், திசம்பர் 14, 2015
தமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
இந்தியாவில் தமிழ்நாட்டின் அமைவிடம்
இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் வட மாவட்டங்களாகிய சென்னை, திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளின் பள்ளிகள், கல்லூரிகள் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று திறக்கப்பட்டன. இப்பாடசாலைகள் தொடர் பெருமழை, மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு மாதகாலம் இயங்காமல் இருந்தது.
2015 நவம்பர் 10-ம் திகதி செவ்வாய்கிழமை தீபஒளி கொண்டாட்டத்திற்காக, நவம்பர் 8-ம் திகதி முதல் 11-ம் திகதி முடிய விடுமுறை வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தொடர் மழை பெருவெள்ளம் போன்ற இடர்களின் காரணங்களால், "வானிலை நடுவம்" அறிவுறுத்தலின்படி தொடர் விடுப்பு அளிக்கப்பட்டது. இடையில் நவம்பர் 19, 20, 21, 23 ஆகிய நான்கு நாட்கள் மட்டும் பாடசாலைகள் இயங்கியிருந்தன.
மூலம்
தொகு- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு, தி இந்து, டிசம்பர் 14, 2015
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை பள்ளிகள் திறப்பு, ஒன் இந்தியா, டிசம்பர் 13, 2015