50 நாட்களாக பசிபிக் கடலில் காணாமல் போயிருந்த 3 சிறுவர்கள் உயிருடன் மீட்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், நவம்பர் 25, 2010

50 நாட்களாகக் பசிபிக் பெருங்கடலில் காணாமல் போயிருந்த டோக்கெலாவ் தீவுகளைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.


டோக்கெலாவ் தீவுகள்

இவர்கள் மூவரும் இறந்து விட்டதாகக் கருதி அவர்களுக்கு இறுதிக் கிரியைகளும் இடம்பெற்று விட்ட நிலையில் மூவரும் பிஜித் தீவின் அருகே நேற்று புதன்கிழமை மாலை மீன்பிடிப் படகொன்றினால் கண்டுபிடிக்கப்பட்டனர். மூவரும் இப்போது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். டோக்கெலாவ் தீவுகள் நியூசிலாந்தின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசம் ஆகும்.


இச்சிறுவர்களில் இருவர் 15 உம் மற்றவர் 16 14 வயதினையும் உடையவர்கள். அக்டோபர் 5 ஆம் நாள் இவர்கள் அட்டாபு திடலில் இடம்பெற்ற ஆண்டுக் களியாட்ட விழாவில் கலந்து கொண்டு விட்டு சிறிய அலுமீனியம் படகில் வீடு திரும்புகையில் காணாமல் போனார்கள்.


நியூசிலாந்து வான்படையினர் இவர்களைத் தேடிய போது அவர்கள் அகப்படவில்லை.


"மூவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், கடும் வெப்பம் காரணமாக உடல் எங்கும் சூரிய வெப்ப வடுக்கள் காணப்படுகின்றன," என இவர்களைக் காப்பாற்றிய மீனவர் டாய் பிரெடெரிக்சன் தெரிவித்தார்.


மூலம்

தொகு