2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று இறுதிப் போட்டியில் விக்டோரியா அசரென்கா வெற்றி

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

சனி, சனவரி 28, 2012

2012 ஆம் ஆண்டுக்கான ஆத்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பெலருசைச் சேர்ந்த விக்டோரியா அசரென்கா உருசியாவைச் சேர்ந்த மரியா சரப்போவாவை 6-3, 6-0 என்ற நேர்சுற்றில் வென்று தனது முதலாவது கிராண்ட் சிலாம் வெற்றியைப் பெற்றார். அத்துடன் உலகின் டென்னிசு வீராங்கனைகளின் வரிசையில் முதலாவது இடத்தையும் பெற்றார்.


விக்டோரியா அசரென்கா

ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பேர்ணில் ரொட் லேவர் அரங்கில் இன்று சனிக்கிழமை பெண்களுக்கான இறுதிப் போட்டி இடம்பெற்றது. 22 வயதான அசரென்கா இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பரிசுத் தொகையாக 2.3 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளார்.


அசரென்காவிடம் தோல்வியுற்ற மரியா சரப்போவா 2008 ஆம் ஆண்டு ஆத்திரேலியத் திறந்த சுற்று வெற்றியாளரும் 2007 ஆம் ஆண்டு இறுதிச் சுற்றில் போட்டியிட்டவரும் ஆவார்.


கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற முதலாவது பெலருஸ் வீராங்கனை அசரென்கா ஆவார். 1988-ல் பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் அப்போதைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த நத்தாசா சுவேரேவா இறுதிச்சுற்று வரை முன்னேறியதே இன்றளவும் சாதனையாக உள்ளது.


மூலம்

தொகு