2010 ஆஷசு கோப்பையை ஆத்திரேலியா தனது மண்ணில் இழந்தது
புதன், திசம்பர் 29, 2010
- 30 திசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது
- 29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி
- 18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்
புகழ்பெற்ற ஆஷஸ் கோப்பையை 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆத்திரேலியாவில் இருந்து இங்கிலாந்து மீளக் கொண்டு செல்ல இருக்கிறது.
இன்று மெல்பேர்ணில் நடந்த நான்காவது போட்டியின் நான்காம் நாளில் ஆத்திரேலியாவில் கடைசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து அணிக்கு வெறும் 20 ஓவர்களே தேவைப்பட்டது. நான்காவது ஆட்டத்தில் ஒரு இன்னிங்க்ஸ், 157 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆத்திரேலிய அணியின் மிக மோசமான தோல்வி இதுவாகும்.
சிட்னியில் அடுத்தவாரம் சனவரி 3 ஆம் நாள் 5வது கடைசிப் போட்டி ஆரம்பமாகிறது. ஆனாலும் இங்கிலாந்து ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னணியில் தற்போது உள்ளதால், கடைசிப் போட்டியில் தோல்வியடைந்தாலும், ஆஷசுக் கோப்பையைத் தன்னுடன் கொண்டு செல்லும்.
இங்கிலாந்து அணியின் மகத்தான வெற்றிக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஆஷ்சுக் கோப்பையை ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீலப் பெறுவதென்பது ஒரு சிறப்பான அம்சம் என்றும், விளையாட்டுப் பிரியர்கலுக்கு இது ஒரு நத்தார் பரிசு எனவும் அவர் புகழ்ந்தார்.
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்களில் ஆத்திரேலியாவின் படு தோல்விகள்:
- லண்டன், ஆகத்து 1938: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ், 579 ஓட்டங்களால் வெற்றி
- அடிலெய்து, மார்ச் 1892: இங்கிலாந்து ஒரு இன்ஙிங்ஸ் 230 ஓட்டங்களால் வெற்றி
- மெல்பேர்ண், பெப்ரவரி 1912: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ், 225 ஓட்டங்களால் வெற்றி
- கல்கத்தா, மார்ச் 1998: இந்திய ஒரு இன்னிங்க்ஸ், 219 ஓட்டங்களால் வெற்றி
- லண்டன், ஆகத்து 1886: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ், 217 ஓட்டங்களால் வெற்றி
- கராச்சி, செப்டம்பர் 1998: பாகிஸ்தான் ஒரு இன்னிங்க்ஸ், 188 ஓட்டங்களால் வெற்றி
- மான்செஸ்ட்டர், சூலை 1956: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ், 170 ஓட்டங்களால் வெற்றி
- மெல்பேர்ண், டிசம்பர் 2010: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ் 157 ஓட்டங்களால் வெற்றி
- லண்டன், ஆகத்து 1888: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ், 137 ஓட்டங்களால் வெற்றி
- டர்பன், பெப்ரவரி 1970: தென்னாப்பிரிக்கா ஒரு இன்னிங்க்ஸ், 129 ஓட்டங்களால் வெற்றி
மூலம்
- England's wait is over: Aussies lose Ashes on home soil, சிட்னி மோர்னிங் எரால்ட், டிசம்பர் 29, 2010
- England beat Australia in Melbourne to retain Ashes, பிபிசி, டிசம்பர் 29, 2010