123 போகோ காரம் தீவிரவாதிகள் சாட் & நைசர் படைகளால் கொல்லப்பட்டனர்

ஞாயிறு, அக்டோபர் 2, 2016

123 போகோ காரம் தீவிரவாதிகள் யூலை மாதத்திலிருந்து சாட், நைசர் நாட்டு படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதை நைசரின் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.


இதுவரை இக்காலகட்டத்தில் போகோ காரமுக்கு எதிரான இணைந்த நடவடிக்கையில் 14 படை வீரர்கள் கொல்லப்பட்டனர் 39 வீரர்கள் காயமுற்றனர் என்று நைசர் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.


யூன் மாதம் சாட், நைசர் நாட்டு படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 30 போகோ காரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


போகோ காரம் தீவிரவாதிகள் தோராயமாக 1,400 சதுர கிமீ அளவுள்ள சாட் ஏரியை சுற்றி இசுலாமிய காலிபத் அமைக்க அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். சாட் ஏரியை சுற்றி சாட், நைசர், கேமரூன், நைசீரியா ஆகிய நாடுகள் உள்ளன.


அக்காலத்தில் நைசீரிய படைகள் போகோ காரம் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த நான்கு நகரங்களை மீட்டனர்.


மூலம் தொகு