வடக்கு ஆப்பிரிக்கப் படகு அகதிகள் 25 பேர் மூச்சுத்திணறி இறப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், ஆகத்து 2, 2011

லிபியாவில் இருந்து வெளியேறிய அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்றில் இருந்து 25 ஆண்களின் இறந்த உடல்களை மீட்டிருப்பதாக இத்தாலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


உயிர்தப்பிய 271 பேருடன் சென்ற 15-மீட்டர் நீளப் படகு லாம்பெடூசா என்ற தெற்கு இத்தாலியத் தீவில் நேற்று திங்கட்கிழமை தரை தட்டியது. படகின் எஞ்சின் அறையில் 25 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் மூச்சுத் திணறி இறந்திருப்பதாகக் கருதப்படுகிறது.


கடந்த சில வாரங்களாக வடக்கு ஆப்பிரிக்க நாடுகளான லிபியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து உள்நாட்டு கலவரம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் அருகில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றமை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.


அகதிகளில் 36 பெண்களும் 21 குழந்தைகளும் அடங்குவர். இப்பகுதியில் மிக மோசமான வானிலை நிலவுவதால் பெரும்பாலான அகதிகள் கடலில் மூழ்கி இறந்துவிடுகின்றனர். லிபிய கடல் எல்லையைக் கடப்பதற்கு சிறிய ரக மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கடல் மூலம் இத்தாலியை எட்டுவதற்கு இரண்டு நாட்களாகும்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு