வங்காள தேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்தது
சனி, நவம்பர் 28, 2009
- 11 பெப்பிரவரி 2024: 2024 வங்காளதேசத் தேர்தல் முடிவுகள்
- 22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 9 மார்ச்சு 2014: துடுப்பாட்டம்: இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது
- 31 சனவரி 2014: ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேச எதிர்க்கட்சித் தலைவருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு
- 6 சனவரி 2014: வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி
வங்காள தேசத்தின் தெற்குப் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற பயணிகள் படகொன்று மூழ்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பலரைக் காணவில்லை என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
"எம்வி கொக்கோ-4" என்ற பயணிகள் கப்பல் போலா தீவில் உள்ள லால்மோகன் என்ற நகரின் கரையோரத் துறைமுகத்தை நெருங்கும் போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றியதாலும், தரையிறங்கும் பயணிகளின் கனத்தைத் தாங்காமலேயே கப்பலின் ஒரு பகுதி நீரினுள் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 10 பேர் இறந்ததாகவும் பலர் கப்பலின அடியில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர்களைத் தேடும் பணி ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதுவரையில் 50 பேர் வரையில் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயணிகளில் பெரும்பாலானோர் டாக்காவில் இருந்து தியாகத் திருநாளைக் கொண்டாட தமது ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் ஆவர்.
மூலம்
தொகு- "'Overcrowded' ferry capsizes in southern Bangladesh". பிபிசி, நவம்பர் 28, 2009
- "At least five dead and 50 missing after ferry disaster in Bangladesh". த கார்டியன், நவம்பர் 27, 2009