ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேச எதிர்க்கட்சித் தலைவருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு

வெள்ளி, சனவரி 31, 2014

ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இசுலாமி தலைவர் மொதியுர் ரகுமான் நிசாமிக்கு தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.


அயல் நாடான இந்தியாவின் அசாம் மாநிலத்துக்கு சட்டவிரோதமாக ஆயுதம் கடத்தியமைக்காக ஜமாத்-இ-இசுலாமி தலைவர் மற்றும் 13 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.


2004 ஆம் ஆண்டில் இவர் வங்காளதேசத்தின் தொழிற்துறை அமைச்சராகப் பணியாற்றியிருந்தார். இவருக்கு எதிராக 1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரில் போர்க்குற்றம் இழைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றம் தொடர்பாக இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.


இவரது கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களுக்கு போர்க்குற்றம் தொடர்பாக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்குகளுக்கான தீர்ப்புகளை அடுத்து நாட்டில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.


நேற்றைய தீர்ப்புத் தொடர்பாகத் தாம் மேன்முறையீடு செய்யவிருப்பதாக ஜமாத் தலைவர் தெரிவித்தார்.மூலம் தொகு